பாகிஸ்தானை இந்தியா தாக்கக் கூடாது: அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

எங்களைப் பின்பற்றி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடாது என அமெரிக்கா கூறியுள்ளது.

ஈராக்கிடம் உள்ள பேரழிவு ஆயுதங்களால் தனது பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், தனது நாட்டுக்குஎதிராக தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வருவதாகக் கூறித் தான் அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது.

அதே ஸ்டைலில் பாகிஸ்தான் இந்தியா தாக்கலாம் என்ன அச்சம் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானைஇந்த பயம் வாட்டி வருகிறது. எங்களை இந்தியா தாக்கினால் பயங்கர எதிர் தாக்குதல் இருக்கும் என்று பாகிஸ்தான்பேச ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் எங்களைப் பின்பற்றி பாகிஸ்தானை இந்தியா தாக்கக் கூடாது என அமெரிக்கா அறிவுரைகூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோன் ப்ரோக்போவிக்ஸ் இதனைத்தெரிவித்தார். ஈராக்கும் காஷ்மீர் பிரச்சனையும் ஒன்றல்ல என்றார்.

புதிய வகை தாக்குதல்: ஈராக் அறிவிப்பு

இதற்கிடையே தங்கள் தலைநகருக்குள் ஊடுருவியுள்ள அமெரிக்கப் படைகளை ஈராக்கியப் படைகள் புதியமுறையில் தாக்கும் என அந் நாட்டு தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் கூறியுள்ளார்.

தற்கொலை, கொரில்லா தாக்குதல் முறைகளை அவர் குறிப்பிட்டாரா அல்லது ரசாயன ஆயுதத் தாக்குதலைக்குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

8 அமெரிக்கர்கள் உடல்கள் மீட்பு:

இதற்கிடையே தென் ஈராக்கில் ஒரு மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பெண்வீராங்கனையை அந் நாட்டுப் படைகள் ஈராக்கியப் படைகளிடம் இருந்து மீட்டன.

அந்தப் பெண்ணை மீட்ட பின்னர் மருத்துவமனையில் நேற்று சோதனை நடத்தியபோது மேலும் 8 உடல்கள்கிடைத்தன. அவை தங்கள் வீரர்களின் உடல்கள் தான் என அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.

பாதாள அறையில் உடல்கள்:

அதே போல தென் மத்திய ஈராக்கில் அல் -சுபையா என்ற இடத்தில் ஒரு ஈராக்கிய ராணுவ முகாமில் 120க்கும்மேற்பட்டவர்களின் உடல்கள் கிடப்பதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. கிட்டத்தட்ட எலும்புக் கூடாகமாறிவிட்ட இந்த உடல்கள் யாருடையவை என்று தெரியவில்லை என்றும் அந்த உடல்கள் அட்டைப் பெட்டிகளில்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+