பாக்தாத் சாலையில் மக்களைச் சந்தித்த சதாம் ஹூசேன்
பாக்தாத்:
ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் நேற்று பாக்தாதின் தெருக்களில் வந்து மக்களைச் சந்தித்தார். இது அமெரிக்க-பிரிட்டிஷ் படைகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன்கள், ராணுவத் தளபதிகளுடன் விவாதிக்கும் படங்கள் காட்டப்பட்டன. இதையடுத்து இந்தக் காட்சிகள்போர் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டவை என அமெரிக்கா கூறியது.
இந் நிலையில் பாக்தாத் விமான நிலையத்தின் பெரும் பகுதியைப் பிடித்துவிட்ட அமெரிக்கப் படைகள் தலைநகர்பாக்தாதின் மையப் பகுதியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் நேற்றிரவு அவரை ஈராக்கிய டிவி காட்டியது.
பாக்தாத் நகரின் முக்கியத் தெருக்களில் அமெரிக்கத் தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்களை அவர் நேரில்பார்வையிட்டார். அவரைப் பார்த்த மக்கள் நூற்றுக்கணக்கில் அங்கு கூடிவிட்டனர். தனது வழக்கமானபாதுகாவலர்களும் தனது வழக்கமான சிரிப்புடன் அவர் சாலைகளில் மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
ஒரு குழந்தையயும் தூக்கிக் கொஞ்சினார். மேலும் தன் கைகளில் முத்தமிட்ட மக்களின் வாழ்த்துக்களை அன்புடன்ஏற்றுக் கொண்டார். ஈராக்கில் ஒரு ஈ நுழைந்தாலும் அதை தங்களது செயற்கைக் கோள்களும், விமானியில்லாவிமானங்களும் கண்டுபிடித்துவிடும் என்று கொக்கரித்து வரும் அமெரிக்காவுக்கு இதன் மூலம் நேரடியாக சவால்விட்டார் சதாம்.
மேலும் சாலைகளில் அமைந்துள்ள பதுங்கு குழிகள், பாதுகாப்பு அரண்களையும் அவர் பார்வையிட்டார். முதலில் 3பேர், 5 பேர் என கூடிய மக்கள் அடுத்த 15 நிமிடங்களில் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டனர்.
அவரைச் சுற்றி நின்று ஆடியும் பாடியும் மகிழ்ந்தனர். வீரர்கள் துப்பாக்கிகளை உயர்த்து சதாமை வாழ்த்தினர்.
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர், குழந்தைள் என அனைத்துத் தரப்பினரும் சதாமை சூழ்ந்துகொண்டனர். பாக்தாதின் எரியும் எண்ணெய்க் கிணறுகளில் இருந்து வெளியேறும் புகை மூட்டமும் அந்தக்காட்சிகளில் தெரிந்தது.
தன்னை அமெரிக்கப் படைகள் சூழ்ந்து வரும் நிலையில் பாக்தாதின் தென் பகுதியில் உள்ள அல்- கஸ்ஸர்மாவட்டத்தின் நடுச் சாலையில் மக்களோடு நின்று கை குலுக்கியதன் மூலம் எதற்கும் தயார் என்பதைக் காட்டியிருக்கிறார் சதாம்.
இதையடுத்து டிவியில் தோன்றியது சதாம் ஹூசேனே அல்ல. அவருடைய டூப் தான் சாலைக்கு வந்தார் என்று கூறஆரம்பித்துள்ளன சி.என்.என்களும் பி.பி.சிக்களும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications