அதிரடிப்படை தலைவர் பதவியிலிருந்து தேவாரம் நீக்கம்
சென்னை:
தமிழக அதிரடிப்படை தலைவர் பதவியிலிருந்து முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் திடீரெனநீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தேவாரத்தை அதிரடிப்படை தலைவராகநியமித்தார் முதல்வர் ஜெயலலிதா.
சந்தனக் கடத்தல் வீரப்பனை எப்படியும் பிடித்தே தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டுகளத்தில் இறங்கினார் தேவாரம்.
ஆனால் இதுவரை வீரப்பனைப் பிடிக்கவே முடியவில்லை. கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவை அவன் கடத்திச் சென்றதும், பின்னர் அவர் மர்மமான முறையில்கொல்லப்பட்டதும்தான் மிச்சம்.
நாகப்பா இறந்த பின்னராவது வீரப்பன் விரைவில் பிடிபடுவான் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவன் தொடர்ந்து காட்டுக்குள்ளேயே ஒளிந்து கொண்டுள்ளான்.
இந்நிலையில் தேவாரம் திடீரென அதிரடிப்படைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வரும் மே 31ம் தேதி வரை அவருக்குப் பதவிக் காலம் இருந்தது. ஆனால் திடீரென்று தேவாரம்தற்போது அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மே 31ம் தேதி அவருக்குப் பணிநீடிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நிலை காரணமாக தேவாரம் பணியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் ஜெயலலிதா அவருக்கு வேறொரு பதவியைக் கொடுத்துள்ளது. தமிழக அரசின்விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக தேவாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேவாரம் நீக்கம் ஏன்?
இதற்கிடையே தேவாரம் பதவியை விட்டு விலகியுள்ளதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
தேவாரத்துக்கு முன்னாள் அதிரடிப்படை தலைவரும் தற்போதைய சென்னை மாநகர போலீஸ்கமிஷனருமான விஜயகுமார் ஆலோசனைகள் கூறி வந்துள்ளார். ஆனால் இது தேவாரத்துக்குப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில்தான் நாகப்பா கடத்தப்பட்டார். அவரை உயிருடன் வீரப்பனிடமிருந்து மீட்கவேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். ஆனால் நாகப்பாவின் உடல்தான் கிடைத்தது.இதனால் தேவாரம் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து தேவாரத்தின் பதவியை ஜெயலலிதாவே காலி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.இவற்றைத் தவிர வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
1. அதிரடிப்படைக்குப் புத்துயிர் ஊட்டும் வகையிலேயே தேவாரம் மாற்றப்பட்டுள்ளார்.
2. தமிழகக் காட்டுப் பகுதிகளுக்குள் வீரப்பன் வந்ததாகக் கருதப்படும் நேரங்களில் அவனைப்பிடிக்காமல் தப்பவிட்டது தேவாரத்தின் மீதிருந்த நன்மதிப்பை ஜெயலலிதாவிடம் குறைத்துவிட்டதால் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தேவாரத்திற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பளம் மற்றும் இதரப் படிகள் கொடுக்கப்பட்டு வந்ததுகுறிப்பிடத்தக்கது.
எது உண்மையோ... தேவாரத்திற்குப் பிறகு அந்தப் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார் என்பதுதெரியவில்லை. அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி. நடராஜன் தற்காலிகமாக கூட்டு அதிரடிப்படைத்தலைவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications