மேலும் 2 வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மேலும் 2 வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலை நிறுத்தத்தின்போது திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியதற்காக தமிழ்நாடுவணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கைதாகிசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளையனை விடுதலை செய்யக் கோரி சென்னையில் வணிகர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம்இருந்து வருகின்றனர். அடுத்ததாக சிறைநிரப்புப் போராட்டமும் நடத்தப் போவதாகதெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 2 வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வணிகர்பேரவையின் தென் சென்னை மாவட்டத் தலைவர் விக்கிரம ராஜா, மாநில இணை செயலாளர்ஆனந்தராஜ் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கஉத்தரவிடப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications