கோவை மாநகராட்சி வாயிலில் மொட்டையடித்துக் கொண்ட கவுன்சிலர்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி வாசலில் அமர்ந்து மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்தியசுயேச்சை கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் கூட்டம் இன்று வழக்கம்போல் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுயேச்சை கவுன்சிலர் அருணாச்சலம் என்பவர் தனது வார்டு தொடர்ந்துபுறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
தனது வார்டில் நலப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை என்றும் மேயர் இதை சரியானமுறையில் கவனிப்பதில்லை என்றும் புகார் கூறினார்.
பின்னர் மேயர் மலரவன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அருகே நின்று கொண்டுஅவர்களுக்கு எதிராக கோஷம் போட்டார். உடனே அவரை அவையிலிருந்து வெளியேற்றுமாறுகாவல் துறையினரை மலரவன் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட அருணாச்சலம், மாநகராட்சி அலுவலக வாசலிலேயேஅமர்ந்து தன் தலையை மொட்டையடித்துக் கொண்டார்.
பின்னர் மொட்டைத் தலையுடனேயே அவைக்குள் வந்து மேயரை முற்றுகையிட்டுப் போராட்டம்நடத்தினார். இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்தனர்.
சுயேச்சை கவுன்சிலரின் செயலால் மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications