பாக்தாத் நகருக்குள் அமெரிக்க படைகள் நுழைந்தன: சதாம் மாளிகை பிடிபட்டது
பாக்தாத்:
அமெரிக்கப் படைகள் பாக்தாத் நகரின் புறநகர்ப் பகுதியில் இன்று காலை ஊடுருவின.
40 கவச வாகனங்கள், 65 பீரங்கிகள் கொண்ட ஒரு படை இன்று காலை பாக்தாதுக்குள் நுழைந்தது. டைகிரிஸ்நதியின் அருகே உள்ள அதிபர் சதாம் ஹூசேனின் இரு மாளிகைக்குள்ளும் இந்தப் படைகள் நுழைந்தன.
மேலும், அல் ரஷீத் ஹோட்டலையும் தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறைக் கட்டடங்களையும்அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. வீடு வீடாக இந்தப் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.
இந்தப் படைகளுக்கு ஈராக்கிய தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பு ஏதும் கிளம்பவில்லை. சில பாலங்களில் மட்டுமேஈராக்கின் ரிபப்ளிகன் கார்ட் படைகள் அமெரிக்கப் படைகளை எதிர்த்து வருகின்றன.
அமெரிக்கப் படைகளுக்குத் துணையாக 10க்கும் மேற்பட்ட விமானங்களும் பல ஹெலிகாப்டர்களும் விண்ணில்சுற்றி வந்து தாக்குதல் நடத்தியவண்ணம் உள்ளன. ஏ-10 ரக பங்கர் பஸ்டர் விமானங்களும் பாக்தாத் மீதுபறந்தவண்ணம் உள்ளன. இவை சதாம் ஹூசேனின் பாதாள மாளிகைகளைத் தாக்கும் என்று தெரிகிறது.
ஈராக்கிய நேரப்படி இன்று காலை 8 மணிக்கு அமெரிக்கப் படைகள் பாக்தாத்துக்குள் நுழைந்தன.
பாக்தாதைக் கைப்பற்ற இன்னும் முழுத் தாக்குதல் தொடங்கவில்லை என்று பென்டகன் கூறியுள்ளது.
இதற்கிடையே இன்று ஈராக்கிய டிவியில் அதிபர் சதாம் ஹூசேனின் அறிக்கை வாசிக்கப்பட்டது. அந்தஅறிக்கையை ராணுவ உடையில் இருந்த அறிவிப்பாளர் படித்தார். அவர் கூறுகையில்,
வீரர்களோடு சேர்ந்து மக்களும் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராடுங்கள். அமெரிக்கப் படைகளுக்குசேதம் விளைவிப்போருக்கு பெரும் அளவிலான பரிசுகள் வழகப்படும் என்றார்.
பாக்தாதில் ஊரடங்கு:
இதற்கிடையே பாக்தாத் நகரில் நேற்றிரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாலை 6மணிக்கு மேல் காலை 6 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது என ஈராக்கிய அதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்.
நகரில் அமெரிக்கப் படைகள் ஊடுருவியுள்ளதையடுத்து பெரும் சண்டை நடக்கலாம் என்று அஞ்சப்படுவதால்ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியே கிராமப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications