கால்வாயில் மூழ்கி 3 மாணவிகள் பரிதாப சாவு
சென்னை:
சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி 3 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையில் உள்ள பழம்பெரும் கால்வாய்களில் ஒன்று பக்கிங்காம் கால்வாய். ஆக்கிரமிப்புகளால்மூடப்பட்டிருந்த பக்கிங்காம் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு,ஆழப்படுத்தப்பட்டு அங்கு தண்ணீர் ஓடிக் கொண்டுள்ளது.
இதில்தான் 3 மாணவிகளும் மூழ்கி இறந்துள்ளனர்.
துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்த தனலட்சுமி, கணேஷ் நகரைச் சேர்ந்ததுர்காதேவி, நீலாங்கரையைச் சேர்ந்த திவ்யா ஆகிய 3 பேரும் தோழிகள். மூவருக்கும் 15வயதாகிறது. 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
தோழிகள் 3 பேரும் மேலும் மூன்று தோழிகளுடன் சேர்ந்து தனலட்சுமி வீட்டுக்குச் சென்றனர். அங்குசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வீட்டுக்குச் செல்ல பஸ் ஸ்டாப்பிற்குக்கிளம்பினர்.
வரும் வழியில் பக்கிங்காம் கால்வாயைக் கடக்க வேண்டும். ஆழம் தெரியாமல் அந்தக் கால்வாயில்ஆறு பேரும் இறங்கினர். அப்போது திவ்யா, தனலட்சுமி, துர்கா ஆகிய 3 பேரும் கால்வாயில் சிக்கிக்கொண்டனர்.
ஆழம் அதிகமாக இருந்ததாலும், சகதி அதிகமாக இருந்ததாலும் அவர்களால் மேலே வரமுடியவில்லை. அப்படியே மூழ்கி விட்டனர்.
இவர்கள் மூழ்குவதைப் பார்த்த மற்ற மாணவிகள் உதவி கேட்டு குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில்இருந்தோர் வந்து மீட்பதற்குள் 3 பேரும் மூச்சுத் திணறி இறந்து விட்டனர்.
3 மாணவிகள் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி இறந்த சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications