ராணி மேரி கல்லூரி முதல்வர் திடீர் மாற்றம்: இன்று மாணவ, மாணவிகள் பேரணி
சென்னை:
ராணி மேரி கல்லூரியின் முதல்வர் பத்மினி திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக கல்லூரிக் கல்வி இயக்குநகரகத்தின் கூடுதல் இயக்குநரான டி. ராஜலட்சுமிஎன்பவர் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை கல்லூரியை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் ராணி மேரி கல்லூரியின் முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பத்மினி நீண்டகால மருத்துவ விடுப்பில் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அரசின் வற்புறுத்தல் காரணமாகவேஅவர் விடுப்பில் போய் விட்டதாகவும் தெரிகிறது.
கல்லூரியின் புதிய முதல்வராக ராஜலட்சுமி பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றவுடனேயே அவர்கல்லூரி விடுதி வார்டனுடன் விடுதிக்குச் சென்று அங்குள்ள மாணவிகளை வெளியேறஉத்தரவிட்டார். அதேபோல் விடுதி உணவகத்தையும் மூட உத்தரவிட்டார்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆத்திரத்தில் இருந்த மாணவிகள் மேலும்கொந்தளிப்படைந்தனர்.
விடுதி அறைகளை விட்டு வெளியே வந்த அவர்கள் ராஜலட்சுமியையும், வார்டனையும் சுற்றி நின்றுகொண்டு கோஷமிட்டனர். அவர்கள் போட்ட கூச்சலில் பீதியடைந்த முதல்வரும் வார்டனும்உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
கல்லூரி விடுதிக்குள் உள்ள கேன்டீனை மூடுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும்மாணவிகள் நலனுக்காக கேன்டீன் நடத்துபவர் தொடர்ந்து அதை திறந்தே வைத்துள்ளார்.உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு காலை, மதியம், இரவு என மூன்றுவேளையும் சாப்பாடு போடப்படுகிறது.
நேற்று பிற்பகல் சமையலுக்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக கேன்டீனைச்சேர்ந்த ஒருவர் வெளியே சென்று திரும்பியபோது அவரை உள்ளே விட போலீஸார் அனுமதிமறுத்தனர். ஆனால் மாணவிகள் போட்ட கூச்சலில் அவரைப் போலீஸார் உள்ளே விட்டனர்.
அனைத்து கல்லூரி மாணவர்கள் பேரணி:
இதற்கிடையே ராணி மேரி கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துஅனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.
பேரணி எங்கு துவங்கும் என்பதை மாணவ, மாணவிகள் ரகசியமாகவே வைத்துள்ளனர். ராணிமேரி கல்லூரியில் வந்து பேரணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.
பெருகும் பொதுமக்கள் ஆதரவு:
ராணி மேரி கல்லூரி மாணவிகள் போராட்டத்திற்கு பல தரப்பிலும் ஆதரவு குவிந்து வருகிறது.பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் பி. ராமமூர்த்தி தன் மனைவி இந்திராவுடன் நேற்று கல்லூரிக்குவந்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
ராணி மேரி கல்லூரியின் முன்னாள் மாணவியான இந்திரா தற்போது நடக்க முடியாத நிலையிலும்சக்கர நாற்காலியில் வந்து மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதைப் பார்த்த மாணவிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதவாறே இந்திராவுக்கும் டாக்டர்ராமமூர்த்திக்கும் நன்றி கூறினர்.
இதேபோல் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கல்லூரிக்கே நேரடியாக வந்துமாணவிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாணவிகளும் தெம்பாகஉள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications