போர்: சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
சென்னை:
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதைக் கண்டித்து சென்னையில் இன்று மாலைமெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தப்படுகிறது.
"போர் எதிர்ப்புக் குழு" என்ற அமைப்பு நடத்தும் இந்தப் போராட்டம் மெரீனா கடற்கரையில் உள்ளகாந்தி சிலை அருகில் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் போருக்கு எதிரான பாடல்கள் பாடப்படும். போருக்கு எதிரான கவிதைகள்வாசிக்கப்படும். போரைக் கண்டிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்படும்.
நிறைவாக, ஈராக் போரை நிறுத்தி அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்திமெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த அமைதிப் போராட்டத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், நாசர், இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வி. சேகர், எடிட்டர் லெனின், பாடகர்கள் ஜேசுதாஸ், உன்னி கிருஷ்ணன், பாடகி பாம்பேஜெயஸ்ரீ மற்றும் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், குழந்தைகள்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நர்சுகள் போராட்டம்:
ஈராக்கில் அமெரிக்கா புரிந்து வரும் போரைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் நர்சுகள் மற்றும் நர்சுமாணவிகள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
ஈராக் போரைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் நர்சுகள், நர்சுமாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் அரசு பொது மருத்துவமனைமுன்பாக இந்தப் போராட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான நர்சுகள் இதில் கலந்து கொண்டனர். மனிதஉயிர்களை அழிக்கும் இந்தப் போருக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று நர்சுகள்கோஷமிட்டனர்.
வேலூரில் முஸ்லீம்கள் பேரணி:
வேலூர் மற்றும் குடியாத்தத்தில் ஈராக் போரைக் கண்டித்து முஸ்லீம்கள் கலந்து கொண்ட கண்டனபோராட்டம் மற்றும் பேரணி நடந்தன.
வேலூரில் உள்ள மேல் விஷாரம் சாலையிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மற்றும்பல்வேறு அமைப்பினர் ஊர்வலமாக கிளம்பி ஈத்கா மைதானத்தில் பேரணியை முடித்துக்கொண்டனர். பின்னர் அங்கு அமெரிக்காவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இறுதியில்அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரின் கொடும்பாவிகள்எரிக்கப்பட்டன.
இதே போல குடியாத்தம் பகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அங்குள்ள நகராட்சிவிளையாட்டு மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
10ம் தேதி கட்சிகள் போராட்டம்:
ஈராக் போரைக் கண்டித்து வரும் 10ம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம்முன்பாக காங்கிரஸ் தலைமையிலான பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தவுள்ளன.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈராக் போரைக் கண்டித்தும் உடனடியாகப் போரை நிறுத்துமாறு கோரியும் என் தலைமையில் வரும்10ம் தேதி பல்வேறு கட்சியினர் கண்டனப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலிருந்து ஊர்வலமாகக் கிளம்பி, ஆயிரம் விளக்கு பகுதியில்உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும்.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு, மக்கள் தமிழ் தேசம் தலைவர் கண்ணப்பன்,முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்,தேசிய லீக் தலைவர் ஹமீதியா பாரூக் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications