தொடர்ந்து 6 நாட்கள் பேசி "கின்னஸ்" சாதனை முயற்சி: கோவை வாலிபர் தொடங்கினார்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

6 நாட்களுக்குத் தொடர்ந்து பேசி கின்னஸ் சாதனை புரியும் முயற்சியில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவாலிபர் ஈடுபட்டுள்ளார்.

கோயம்புத்தூர் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் ஒருடிரைவர். சாதனை புரிய வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் உள்ளவர்.

அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த அவருக்கு தொடர்ந்து 48 மணி நேரம் பேசி உலகசாதனை படைத்துள்ள லண்டனைச் சேர்ந்த மெர்வின் ராபர்ட் என்பவரின் சாதனைக் கதை தெரியவந்தது. இதை முறியடித்து கூடுதல் நேரம் பேச முடிவு செய்தார் மணி.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தனது சாதனைப் பேச்சை மணி தொடங்கினார். இதற்காக ஒருசிறப்பு மேடை போடப்பட்டது. அதில் அமர்ந்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய "விஷன்2020" என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினார்.

மேலும் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட பல்துறை புத்தகங்களைப் படிக்கவுள்ளார் மணி.

பேச்சுக்கிடையே கின்னஸ் புத்தக நிர்வாகிகள் நிர்ணயித்துள்ள கால அளவுக்கு ஏற்றவாறுஅவ்வப்போது சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார் மணி. இந்நிகழ்ச்சி வீடியோவாக படமாக்கப்பட்டுவருகிறது.

மொத்தம் 6 நாட்கள் தொடர்ந்து பேச மணி முடிவு செய்துள்ளார். அதன் பிறகு இந்த சாதனை நிகழ்ச்சிகின்னஸ் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+