போராட்டத்தில் குதித்த 67 அரசுக் கல்லூரிகள்
சென்னை:
ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரி மாணவ,மாணவிகளும் ஆசிரியர், ஆசிரியைகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தங்கள் கல்லூரியை இடிக்க தமிழக அரசு எடுத்துள்ளமுடிவைக் கண்டித்து கடந்த 4 நாட்களாக ராணி மேரி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்குப் பல்வேறு தரப்பிலான மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள 67 அரசுக்கல்லூரிகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் இன்று போராட்டம்நடத்தினர்.
மேலும் அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பாக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளுநர்ராமமோகன் ராவ் ஆகியோருக்குத் தந்திகளும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக சென்னை மாகாணக் கல்லூரி(பிரஸிடென்சி காலேஜ்) மாணவர்களும் இன்று வகுப்புக்களைப் புறக்கணித்து உள்ளிருப்புப்போராட்டம் மேற்கொண்டனர்.
சட்டசபையில்...
இதற்கிடையே தமிழக சட்டசபையிலும் இந்தப் பிரச்சனை இன்று எதிரொலித்தது.
சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்புத்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இந்தப் பிரச்சனை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளதால் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர முடியாது என்று சபாநாயகர் காளிமுத்து மறுத்துவிட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications