அத்வானி மீது வைகோ மறைமுகத் தாக்குதல்
சென்னை:
பொடா வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ததில் மத்திய அரசு மிகவும் அலட்சியப்போக்குடனும் பொறுப்பற்ற முறையிலும் நடந்து கொண்டது என்று மதிமுக பொதுச் செயலாளரானவைகோ குற்றம் சாட்டினார்.
தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ தொடர்ந்துள்ள வழக்கில் பதில் மனு தாக்கல்செய்த மத்திய அரசு பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது சரி தான் என்று கூறியது.இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜூனியர் வக்கீல்கள் தவறுசெய்துவிட்டதாக பொய் சொல்லியது மத்திய அரசு.
பின்னர் தனது தவறைத் திருத்திக் கொண்டு வைகோ கைது தவறு என்று பதில் மனு தாக்கல் செய்தது.வைகோவுக்கு எதிராக மனு தாக்கலாகக் காரணமே துணைப் பிரதமர் அத்வானி தான் என்றுதெரியவந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து சொல்ல விரும்பாத அவர் தான் பிரதமர்வாஜ்பாய்க்கே தெரியாமல் அப்படிப்பட்ட மனுவைத் தாக்கல் செய்ய வைத்தார்.
பின்னர் வாஜ்பாய் தலையிட்டு அந்த மனுவை மாற்றினார்.
இந் நிலையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வைகோ மற்றும் 8 மதிமுக பிரமுகர்கள் இன்றுசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன் ஒத்திவைத்துஉத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,
பொடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுபொறுப்பற்ற முறையில் பதில் மனு தாக்கல் செய்தது. இது மத்திய அரசின் பலவீனத்தையேகாட்டுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர்தான் (அத்வானி)இவ்விஷயத்தில் மத்திய அரசை ஆட்டி வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முயற்சிக்குப் பின்னர்தான் மற்றொரு பதில் மனுவைத் தாக்கல் செய்யமத்திய அரசு முடிவெடுத்தது.
பழைய மரபுகளை உடைத்து எறிவதே ஜெயலலிதாவின் வேலையாகப் போய்விட்டது. எனவேதான்ராணி மேரி கல்லூரியை இடிக்க அவர் முடிவு செய்துள்ளார் என்றார் வைகோ.
பின்னர் வைகோ பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications