இந்தியர்கள் சித்திரவதை: 6 மலேசிய போலீசார் மீது நடவடிக்கை
கோலாலம்பூர்:
கடந்த மாதம் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்தியர்களைச்சித்திரவதை செய்த 6 மலேசியப் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியஅரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 9ம் தேதி கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில்நுழைந்த போலீசார் அங்கிருந்த இந்தியர்களை மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்தனர்.
அந்தக் குடியிருப்பில் இருந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் என்ஜினியர்கள்,குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உரிய விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் மலேசியாவில் தங்கியிருந்ததாகக் கூறிமலேசியப் போலீசார் அவர்களை சித்திரவதை செய்துள்ளனர். மேலும் பல சாப்ட்வேர்என்ஜினியர்களை போலீஸ் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அவர்களை மண்டிபோட்டுஉட்காருமாறு கூறியும் சித்திரவதை செய்தனர் மலேசிய போலீசார்.
சமீப காலமாக வெளிநாடுகளில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொடுமைகள் இழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரமும் இந்திய சாப்ட்வேர்நிபுணர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மலேசியா மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவுக்கு வரவிருந்த ஒருமலேசிய அமைச்சரையும் வரவேண்டாம் என கூறி விட்டது.
பின்னர் சில நாட்கள் கழித்து இந்தச் சம்பவத்திற்கு மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவிவருத்தம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரிக்கவும் மலேசியக் காவல் துறைக்குஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின்போது 6 மலேசியப் போலீசார் வரைமுறைகளை மீறிஇந்தியர்கள் மீது தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.
அந்த ஆறு போலீசார் மீதும் விரைவில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நோரியன் மாய் கூறினார். ஆனால் அந்தப் போலீசாரின் பெயர்விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications