இந்தியாவின் மிரட்டல்: பாகிஸ்தான் புலம்பல்
இஸ்லாமாபாத்:
அக்னி-3 ரக அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை இந்தியா ஏவி சோதனையிட்டால் நாங்கள் சரியான பதிலடிகொடுப்போம் என பாகிஸ்தான் புலம்பியுள்ளது.
அணு ஆயுதத்தை ஏந்தி, அதிக தூரம் செல்லும் அக்னி-3 ஏவுகணைத் தயாரிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில்அந்த ஏவுகணையைச் செலுத்தி சோதனை நடத்தப்படும் எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து பாகிஸ்தானின் தனது நெஞ்சரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அந் நாட்டு செய்தித்துறை அமைச்சர்சேக் ரஷீத் அகமத் கூறுகையில், ஈராக்கை அமெரிக்கா தாக்கியதைப் போல பாகிஸ்தானைத் தாக்கவும் திட்டமிட்டுவருவதாக இந்தியா மிரட்டி வருகிறது. (தீவிரவாதம் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பிரச்சனைஏற்படுத்தினால், ஈராக்கை அமெரிக்கா தாக்கியது மாதிரி, பாகிஸ்தானை இந்தியா தாக்கும் என வெளியுறவுத்துறைஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்).
எங்களாலும் அதே போன்ற தாக்குதல் நடத்த முடியும். எங்கள் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படும் என நினைத்தால்இந்தியாவைத் தாக்குவோம்.
மேலும் அக்னி- 3 ரக ஏவுகணையைச் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. நாங்கள் இந்தியாவுடன் ஆயுத போட்டிநடத்த விரும்பவில்லை. ஆனால், எங்களைக் குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்துவதை ஏற்க முடியாது.
இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் தவிர, ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்களும் உள்ளன. ஆனால், அந்தஆயுதங்களை அருகில் உள்ள ஒரு நாட்டில் இந்தியா பதுக்கி வைத்துள்ளது என்றார் ரஷீத். ஆனால், அந்த நாட்டின்பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.
இந்திய மிரட்டல்: அமெரிக்கா கவலை
ஈராக்கை அமெரிக்கா தாக்கியது போல பாகிஸ்தானைத் தாக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு என இந்தியாகூறியுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால் உடனேதீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தியாக வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியாவின் மிரட்டலையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுடனும் அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்தஅதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications