தமிழகத்தில் விரைவில் 12,000 புதிய போலீசார் நியமனம்
சென்னை:
தமிழகத்தில் விரைவில் 12,000 போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்ஜெயலலிதா. அதில்,
தமிழகத்தில் 8,431 ஆண் போலீசார், 2,306 பெண் போலீசார் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும் 641 ஆண்சப்-இன்ஸ்பெக்டர்களும், 961 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்படுவார்கள்.
இவர்களைத் தேர்வெடுக்கும் பணியில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏராளமானவர்களுடன்காட்டில் சுற்றித் திரிந்த வீரப்பனின் கூட்டம் தற்போது சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவன் கும்பலில் ஒருசிலர்தான் உள்ளனர். இதனால் அவன் ஓரிடத்தில் நிலைத்து நிற்க முடியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறான்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளோம்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியே. ஏனெனில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications