ராணி மேரி கல்லூரி மாணவிகளுடன் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை:
ராணி மேரி கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுகஇளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் இன்று அந்தக் கல்லூரிக்குச் சென்று அவர்களைச் சந்தித்தார்.
தங்கள் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கோரி கடந்த நான்கு நாட்களாக அக்கல்லூரிமாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கல்லூரியை இடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் அவர்கள் தங்கள் போராட்டத்தைக்கைவிட்டுள்ளனர்.
இருந்தாலும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மரத்தடியில் அமர்ந்து அவர்கள் படித்து வருகின்றனர்.கல்லூரி இடிக்கப்படாது என்று அரசு உத்தரவாதம் தரும் வரை கல்லூரியை விட்டு வெளியேசெல்லப் போவதில்லை என்று மாணவிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று காலை கல்லூரிக்குச் சென்றுஅவர்களைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அவருடன் பொன்முடி, ஹூசேன் உள்ளிட்ட 6 திமுகஎம்.எல்.ஏக்களும் சென்றிருந்தனர்.
ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு ஸ்டாலின் ஆறுதலும், நம்பிக்கையும் கூறினார். பின்னர்அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கல்லூரி மாணவிகளுக்குப் பொதுமக்கள் தரும் ஆதரவைப் போலவே திமுகவும் தார்மீக ஆதரவைஅளிக்கிறது.
மாணவிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவைத் தெரிவித்து விட்டு வருமாறு திமுக தலைவர்கருணாநிதி எங்களிடம் கூறினார். அதன் அடிப்படையில்தான் நாங்கள் இங்கு வந்து மாணவிகளுக்குஎங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
தற்போதுள்ள தலைமைச் செயலகத்திலேயே அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளன. இந்நிலையில்ராணி மேரி கல்லூரியை இடித்து விட்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட நினைப்பதுகண்டனத்திற்குரியது.
வாஸ்து என்னும் சாஸ்திரம்தான் அதிமுக அரசை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது போலும்என்றார் ஸ்டாலின்.
பின்னர் ஸ்டாலின் கல்லூரியை விட்டு வெளியேறியபோது போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர்.அனுமதி இல்லாமல் அவர் கல்லூரிக்குள் நுழைந்ததாகப் புகார் கூறினார். இதையடுத்து அங்கு சிறிதுநேரம் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்ஸ்டாலின் செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications