ராணிமேரி கல்லூரியை திறக்க தலைமை நீதிபதி உத்தரவு: அரசுக்கு சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஒரு வாரமாகப் பூட்டப்பட்டிருந்த ராணி மேரி கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட்டுவகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குஉத்தரவிட்டது. கல்லூரியை மூடி மாணவிகளை மரத்தடியில் உட்கார வைத்த ஜெயலலிதா அரசுக்குநீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

ராணி மேரி கல்லூரியை இடித்து விட்டு அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசுமுடிவு செய்தது. இதைக் கண்டித்து அக்கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

இதையடுத்து கல்லூரியை காலவரையின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் முதல்வர்ஜெயலலிதாவின் உத்தரவுகளுக்கு ஆட மறுத்த ராணி மேரி கல்லூரியின் முதல்வரும்மாற்றப்பட்டார்.

இந்நிலையில் கல்லூரியை இடிக்கும் அரசின் முடிவைக் கண்டித்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்லூரி இடிக்கப்படுவதற்குஇடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெற்றது. வழக்கைவிசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிஇப்ராகிம் அபிபுல்லா ஆகியோர் ராணி மேரி கல்லூரியை உடனடியாகத் திறக்க உத்தரவிட்டனர்.

மாணவிகள் படிப்பதற்கு வசதியாக கல்லூரி வகுப்பறைகளையும் உடனடியாகத் திறந்து விடவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தக் கூடாது என்று மாணவிகளுக்கும்ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்திய நீதிபதிகள், போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகவகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அரசுக்கு சூடு:

இந்தப் பிரச்சனையில் தமிழக அரசையும் நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.

இது தொடர்பாக நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறுகையில், மாணவிகள் போராட்டம் செய்ததற்காககல்லூரியை மூட அரசு உத்தரவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறுவதை ஏற்க முடியாது. அது அரசின்கையாலாகதனத்தைத் தான் காட்டுகிறது.

மாணவிகள் ஸ்டிரைக் செய்தால் கல்லூரியை மூடி விடுகிறீர்கள். அதுபோல் வக்கீல்கள் ஸ்டிரைக்செய்தால் நீதிமன்றத்தை நாங்கள் மூடி விடுகிறோமா? நிலைமையை நாங்கள் சமாளிப்பதில்லையா?

அதுபோல் மாணவிகள் பிரச்சனையை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும் என்றார்.

மாணவிகள் என்பதால் கல்லூரியை மூடினோம் என அரசு வழக்கறிஞர் கூறினார். அவருக்குபதிலளித்த நீதிபதிகள், மாணவிகள் என்றால் பெண் போலீஸை வைத்து கட்டுப்படுத்துங்கள்.அதற்காக கல்லூரியை ஏன் மூடினீர்கள்?

கல்லூரி உடனே திறக்கப்பட வேண்டும். வகுப்பறைகளைத் திறங்கல். இன்றே மாணவிகள்வகுப்புகளுக்குப் போகட்டும். ஆசிரியைகள் இன்றே வகுப்புகளை எடுக்கட்டும் இந்த உத்தரவையார் மீறினாலும் நடவடிக்கை எடுப்போம். மாணவிகளை மரத்தடியில் உட்கார வைத்திருப்பதைபத்திரிக்கைகளில் பார்த்தோம். நெஞ்சம் பதறுகிறது. இது சரியல்ல. கல்லூரி திறக்கப்பட்டுவிட்டதாஇல்லையா என்பதை இன்றே எங்களிடம் அரசு பதில் தந்தாக வேண்டும் என்றார் தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி.

மாணவிகள் நீதிமன்றத்தை மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லூரி இடிப்பை தடை செய்யும்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துவிடுவேன் என்றார் நீதிபதி.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ராணிமேரிக் கல்லூரி மாணவிகள் மனம் மகிழ்ந்துள்ளனர்.மாணவிகளை வகுப்பறைகளை விட்டு விரட்டிவிட்டு, கல்லூரியையும் மூடிவிட்டு அதை உடைக்கத்திட்டமிட்ட தமிழக அரசுக்கு இதன் மூலம் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி தொடர்ந்து நடப்பதால், அங்கு மாணவிகள் இருப்பதாலும் அதை இடிக்க முடியாத நிலைக்குதமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+