தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலைமறியல்- கல்வீச்சு: 10,000 பேர் கைது
சென்னை:
ராணி மேரி கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின்கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பல மாவட்டங்களில் இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. பதற்றம்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவில் போராட்டம்:
சென்னையில் நேற்று ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அண்ணா சாலையில்நள்ளிரவிலேயே நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் சாலை மறியலில் இறங்கினர். அவர்களைபோலீசார் விரட்ட முயற்சித்தனர்.
ஆனாலும் அவர்கள் கலைந்து போகவில்லை. இதையடுத்து திமுக தொண்டர்களைப் போலீசார் கைதுசெய்தனர்.
புதுவை முன்னாள் முதல்வர் கைது:
அதுபோல் ஸ்டாலின் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்று கேள்விப்பட்டதும்பாண்டிச்சேரியில் ஏராளமான திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரிமுன்னாள் முதல்வர் ஜானகிராமன் தலைமையிலான திமுகவினர் ஸ்டாலின் கொண்டு செல்லப்பட்டபோலீஸ் வேனை அவர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதையடுத்து அவர்களைப் போலீசார்கைது செய்தனர்.
கிட்டு கைது...
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்துவருகிறது. சைதாப்பேட்டையில் கிட்டு தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் நடுரோட்டில்அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
கிட்டு கூறுகையில், ராணிமேரிக் கல்லூரி முதல்வரை மிரட்டி ஸ்டாலினுக்கு எதிரான லெட்டர்வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா என்றார். இதையடுத்து அவரையும் திமுகவினரையும் போலீசார்கைது செய்தனர்.
மகளிர் அணியினர் கைது...
சென்னை அரசினர் தோட்டம் அருகே திமுக மகளிர் அணியினர் நடுரோட்டில் உட்கார்ந்துபோராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தேனாம்பேட்டையில்நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் நடுரோட்டில் படுத்தனர். அவர்களையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மாவட்டங்களில்...
திருவண்ணாமலையில் முன்னாள் திமுக அமைச்சர் கு.பிச்சாண்டி தலைமையில் சாலை மறியலில்ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரியில்திமுக எம்.பி. வெற்றிச் செல்வன் தலைமையில் போராட்டம் நடத்திய ஏராளமான திமுகவினரைப்போலீசார் கைது செய்தனர்.
கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையிலும் திண்டுக்கல்லில்முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலும் ஆயிரக்கணக்கான திமுகவினர் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டு கைதாயினர்.
அரக்கி ஜெயலலிதா: பனிச்சாமி தாக்கு
கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திடீர்சாலைமறியலில் ஈடுபட்டனர். நிருபர்களிடம் பேசிய பழனிச்சாமி, அரக்கி மாதிரி செயல்பட ஆரம்பித்திருக்கிறார்ஜெயலலிதா. இதனால் திமுகவினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களும் கடும் எரிச்சலில் உள்ளனர்.சிறையைக் காட்டி திமுககாரனை மிரட்டிவிட முடியாது என்றார். இப்படிப் பேசிய சில நிமிடங்களில் அவரும்உடனிருந்தவர்ளும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலும் ஈரோட்டில் உபைதுல்லாதலைமையிலும் பெரம்பலூர், நெல்லை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ஆகிய இடஙகளிலும்ஆயிரக்கணக்கான திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுகைதாகியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications