For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைது எச்சரிக்கையையும் மீறி அரசு ஊழியர் ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தங்களுடைய பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

வேலைநிறுத்தம் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்ற அரசின்எச்சரிக்கையைக் கண்டு பயப்படமாட்டோம் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன.

பறிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை மீண்டும் தரக்கோரி ஜூன் மாதம் 4ம் தேதி முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் சங்கங்கள்அறிவித்துள்ளன.

அதற்கு முன்பு அடையாள போராட்டமாக இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்நடைபெற்றது. சென்னை-சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகம், டி.எம்.எஸ். வளாகம் ஆகியஇடங்களில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது.

வெறிச்சோடிய கோட்டை:

இந்நிலையில் ஸ்டிரைக் காரணமாக தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசுஅலுவலகங்களிலும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

சுமார் 7,095 ஊழியர்கள் பணிபுரியும் தலைமைச் செயலகத்தில் 300 ஊழியர்கள் மட்டுமே பணிக்குவந்திருந்தனர்.

முக்கிய அதிகாரிகளும் ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. முக்கிய துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். சில அமைச்சர்களின் அரசு டிரைவர்களும் கூட ஸ்டிரைக்கில்ஈடுபட்டுள்ளதால் மாற்று டிரைவர்கள் உதவியுடன் காரில் அவர்கள் கோட்டைக்கு வந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா செல்லும் லிப்டைத் தவிர மற்ற அனைத்து லிப்டுகளும் ஊழியர்கள்இல்லாததால் இயங்கவில்லை. கேன்டீனும் இழுத்து மூடப்பட்டிருந்தது.

"அரசே காரணம்":

இந்தப் போராட்டத்திற்கு அரசுதான் காரணம் என்றும் அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்துஉண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஊழியர்கள் வராத காரணத்தால் கலெக்டர் அலுவலகங்கள்எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன.

முன்னதாக, போராட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அரசின்தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அங்குகூடியிருந்தனர்.

அவர்களிடம் பேசிய தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் பாண்டுரங்கன்கூறுகையில், எஸ்மா சட்டத்தை ஏவினாலும் அதைவிட கொடுமையான சட்டத்தை ஏவினாலும்நாங்கள் பயப்படப் போவதில்லை. போராடிப் பெற்ற சலுகைகளை மீண்டும் பெறும் வரை நாங்கள்ஓயவும் மாட்டோம் என்றார்.

வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் அதே நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசுஊழியர்கள் நடத்துகிறார்கள். கடந்த முறை நடந்த அரசு ஊழியர் போராட்டம் தோல்வியடைந்தது.

அதற்குக் காரணம், முக்கியமான சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின்தலைவர் சூரியமூர்த்தி திடீரென்று போராட்டத்தை வாபஸ் பெற்று காலை வாரிவிட்டததுதான்.ஆனால் இந்த முறை அவரது சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளதால் வேலைநிறுத்தம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 9.50 மணிக்குள் அலுவலகத்தில் ஆஜராகாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X