இன்சாட்-3ஏ வெற்றிகரமாக விண்ணில் பறந்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட் -3ஏ இன்று அதிகாலை விண்ணில்வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோளை ஐரோப்பாவின் ஏரியன்-5 ஸ்பேஸ் ராக்கெட் நேற்று காலை விண்ணில்செலுத்துவதாக இருந்தது. ஆனால் இன்சாட் செயற்கைக்கோளின் டெலிமெட்ரி சிக்னல்தெளிவில்லாமல் இருந்ததை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கடைசிநேரத்தில் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.கோளாறைச் சரிசெய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று இன்சாட் செயற்கைக்கோள் விண்ணில்ஏவப்படும் என்று அறிவித்தனர்.

அதன்படி இன்று அதிகாலை தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொருவிண்வெளித் தளத்திலிருந்து இன்சாட்-3ஏ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஏரியன் ஸ்பேஸ்ராக்கெட் வெற்றிகரமாகப் பறந்தது. இந்திய செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் பனாம்சாட்என்ற தொலைத் தொடர்பு செயற்கைக்கோளையும் ஏரியன் ராக்கெட் சுமந்து சென்றது.

ராக்கெட் கிளம்பிய 21வது நிமிடத்தில் இன்சாட்-3ஏ செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து விடுபட்டுவிண்ணில் வலம் வரத் தொடங்கியது.

இதையடுத்து கொரு விண்வெளித் தளத்திலிருந்த இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன், திட்டஇயக்குநர் ராஜாங்கம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

காலை 4.52 மணிக்கெல்லாம் இன்சாட் செயற்கைக்கோளிலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ளஇஸ்ரோவின் ஹசன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு சிக்னல்கள் வரத் தொடங்கி விட்டன.

தகவல் தொடர்பு, டி.வி. ஒளிபரப்பு, வானிலை தகவல்கள், மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டபலவற்றுக்கும் இன்சாட்-3ஏ செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.

இன்சாட்-3ஏ வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா அடுத்ததாகத் தயாரிக்க உள்ளஇன்சாட்-4ஏ மற்றும் இன்சாட்-4பி ஆகிய செயற்கைக்கோள்களையும் ஏரியன் ராக்கெட் மூலம்விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனத்திற்குகஸ்தூரிரங்கன் உறுதி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+