ஈராக்கின் தோல்வியால் அரபு மக்கள் சோகம்
பாக்தாத்:
ஈராக் முழுவதும் நேற்றிர முதல் சூறையாடலும், அலுவலகங்கள், கடைகள், வீடுகளில் நுழைந்து கொள்ளைஅடிக்கும் சம்பவங்களம் நடந்து வருகின்றன.
இதையடுத்து பாக்தாதிலும் ஈராக்கின் தென் பகுதிகளிலும் ஷியா இனத்தினரும், நாட்டின் வட பகுதியில் குர்துஇனத்தினரும் சதாம் எதிர்ப்பு ஊர்வலகங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையும்அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை வாழ்த்தியும் பேரணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், அதே நேரத்தில் சன்னி இன மக்களிடையிலும் பிற அரபு நாடுகளிலும் சதாமின் ஆட்சி வீழ்ந்ததையடுத்துபெரும் கவலை குடிகொண்டுள்ளது. பெரும்பாலான அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவைஆதரித்தாலும் மக்களிடயைே சதாமுக்குத் தான் ஆதரவு உள்ளது.
இப்போது ஈராக்கின் தோல்வி தங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தோல்வியாக அரேபியர்கள்கருதுகின்றனர்.
இந் நிலையில் ஈராக்கின் பல பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவுக் கிடங்குகள், சதாம் மற்றும்அவரது ஆட்சியில் உயர் பதவியில் இருந்தவர்களின் வீடுகள், வசதி படைத்த மக்களின் வீடுகளை உடைத்துபெருமளவில் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல லட்சம் ஈராக்கிய மக்கள் நேற்றிரவு தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. தங்களது வீடுகளைப் பாதுகாக்கதுப்பாக்கிகள் மற்றும் வாள்களும் அவர்கள் வீடுகளுக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த கொள்ளை மற்றும் சூறையாடல்களை அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் தடுத்து நிறுத்தவில்லை.
-->












Click it and Unblock the Notifications