அப்பாவி விமான பயணியை அடித்து உதைத்த சுங்க அதிகாரிகள்
சென்னை:
சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு அப்பாவிப் பயணியை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையாக அடித்து உதைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி மோதல்கள் நடப்பது சகஜமாகி விட்டது. சமீபத்தில் நடந்தஒரு வன்முறையில் விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறை அலுவலக கண்ணாடிகள் அடித்துநெறுக்கப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் ஒரு கும்பலைச் சேர்ந்த சிலரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர் என நினைத்து, சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு அப்பாவிப்பயணியை சுங்கத் துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
கீழக்கரையைச் சேர்ந்த ஹூசேன் பாரூக் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ஏர் இந்தியாவிமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தார்.
அங்கு அவரை சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இரவு முழுவதும்விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிட்டனர்.
சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி அவரை சுங்கஅதிகாரிகள் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ஒருவழியாக நேற்று காலை 5 மணிக்குத்தான் அவரை வெளியே விட்டனர். கடுமையானகாயங்களுடன் ஹூசேன் விமான நிலையக் காவல் நிலையத்தில் வந்து இது தொடர்பாகப் புகார்கொடுத்தார்.
அவரைப் போலீசார் உடனடியாகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


