For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவர் ஏறி குதித்து ஸ்டாலினை கைது செய்த போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வேளச்சேரியில் உள்ள தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திமுக இளைஞரணிச் செயலாளர்ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

ராணி மேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள்மீது அக்கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்ய போலீசார்சென்றனர்.

நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணிக்கு போலீஸ் துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன்தலைமையில் ஸ்டாலின் வீட்டுக்குப் போலீசார் சென்றனர். அவருடைய வீட்டின் பிரம்மாண்டமானஇரும்புக் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் திறக்குமாறு போலீசார் கூறினர்.

ஆனால் வாயில் காவலர்கள் கதவைத் திறக்க மறுத்து விட்டனர். மேலும் அதற்குள் விஷயம் தெரிந்துஸ்டாலின் வீட்டின் முன்பாக ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டனர். போலீசார் உள்ளேநுழைந்துவிட முடியாதவாறு அவர்கள் தடுத்து நின்று கொண்டனர்.

இதையடுத்து போலீசார் அடாவடியாக ஸ்டாலின் வீட்டுக்குள் நுழைந்தனர். கதவின் மீதும்,காம்பவுண்ட் சுவர் மீதும் ஏறி ஸ்டாலின் வீட்டுக்குள் குதித்தனர். அப்போது அவர்களுக்கும் திமுகதொண்டர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டாலின் சலசலப்பு கேட்டு எழுந்து வெளியே வந்தார். அவரைக்கைது செய்ய போலீசார் வந்திருக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டதும் அவர் நேராக வாசலுக்கேவந்து விட்டார்.

பின்னர் அவரைப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொண்டர்களைப் பார்த்துச்சிரித்தவாறு, கையசைத்துக் கொண்டே போலீஸ் வாகனத்தில் ஏறினார் ஸ்டாலின்.

பின்னர் அவர் சென்னை-சைதாப்பேட்டை 13வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிவேங்கடவரதனின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நள்ளிரவு நேரத்தில் சிறையில் அடைக்குமாறுஉத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதி, அவரை விடியும் வரை போலீஸ் காவலில் வைக்கஉத்தரவிட்டார்.

ஆனால், அராஜகம் செய்யும் போலீஸ் காவலில் இரவு முழுவதும் இருக்க முடியாது என்றுநீதிபதியிடம் ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி வேங்கடவரதன்உத்தரவிட்டார்.

போர்க்களமான வேளச்சேரி:

ஸ்டாலினைக் கைது செய்ய போலீசார் வருகின்றனர் என்று தெரிந்ததும் அவருடைய வீடு இருக்கும்வேளச்சேரி பகுதியில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டனர்.

ஸ்டாலின் வீடு இருக்கும் சீதாபதி நகரிலிருந்து வேளச்சேரி மெயின் ரோடு வரையிலும் திமுகவினர்குழுமி இருந்தனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டு வெளியே அழைத்து வரப்படும்போது திமுக தொண்டர்கள்போலீசாரைத் தடுத்து நிறுத்தினர். ஸ்டாலினை வேனில் ஏற்ற விடாமல் அவர்கள் போலீசாரைத்தடுத்தனர்.

இதனால் திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கோபமடைந்த சில போலீசார் தடியடி நடத்தி திமுக தொண்டர்களைக் கலைத்தனர். இதையடுத்துஅவர்கள் சிதறி ஓடினர்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது. ஸ்டாலினை போலீசார்அழைத்துக் கொண்டு சென்ற பின்னரும் வேளச்சேரியில் திமுக தொண்டர்கள் கடும் கோபத்துடன்சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X