பி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்: 1.4 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாய தொழில்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்நாளை தொடங்குகின்றன.
2 நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வை மொத்தம் 1,40,327 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.1,35,602 பேர் இயல் அறிவியல் தேர்வையும், 1,22,640 பேர் கணிதத் தேர்வையும், 77,692 பேர்உயிரியல் தேர்வையும் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 286 மையங்களில் நுழைவுத் தேர்வு நடக்கிறது. இது தொடர்பாக 36நகரங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
நுழைவுத் தேர்வைக் கண்காணிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமிதலைமையில் 25 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications