கல்லூரி பேராசிரியர் கடத்தல்: ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் கல்லூரி பேராசியரைக் கடத்திச் சென்று ரூ.3 லட்சம் பணம் கேட்ட 6 பேர் கொண்டகும்பல் பிடிபட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜெயக்குமார். இவர் ஒருஎன்ஜினியரிங் கல்லூரியில் பேராசியராக உள்ளார்.

அவரை ஒரு கும்பல் நேற்று முன்தினம் கடத்திச் சென்றது. இந்நிலையில் பேராசிரியர் வீட்டுக்கு ஒருடெலிபோன் அழைப்பு வந்தது.

போனில் பேசிய ஒருவன், ரூ.3 லட்சம் கொடுத்தால்தான் வின்சென்ட் விடுவிக்கப்படுவார் என்றான்.இதைத் தொடர்ந்து ரூ1.25 லட்சம் பணத்திற்கான காசோலை அந்தக் கும்பலிடம் கொடுக்கப்பட்டது.பின்னர் பொன்மலை போலீசாரிடமும் வின்சென்ட் குடும்பத்தினர் புகார் செய்தனர்.

போலீஸ் படை உடனடியாக காசோலையிலிருந்து பணம் எடுக்கக் கூடிய மதுரை வங்கிக் கிளைக்குவிரைந்தது. அங்கு போலீஸார் காத்திருந்தபோது காசோலையைப் பணமாக மாற்றிக் கொண்டுஒருவன் வேகமாக வங்கியை விட்டு வெளியேறினான்.

உடனே அவனைச் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்த ரூ.1.25பணத்தையும் அவர்கள் கைப்பற்றினர். அவனை நன்றாகக் "கவனித்ததில்" வின்சென்ட் கடத்திவைக்கப்பட்டிருந்த இடம் குறித்து தெரிய வந்தது. அவரைப் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

வின்சென்ட்டைக் கடத்தி வைத்திருந்த சங்கர், சத்தியமூர்த்தி, ரமேஷ் உள்ளிட்ட மேலும் 5 பேரையும்போலீசார் கைது செய்தனர். சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சங்கர் தலைமையில்தான் இந்தக் கும்பல்பேராசிரியைக் கடத்தியது.

இந்தக் கடத்தலில் தொடர்புடைய மேலும் 3 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கைதானவர்களிடமிருந்து கார், வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+