மேலும் 18 கோவில்களில் அன்னதானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் தமிழ் புத்தாண்டு முதல் மேலும் 18 கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில்,
தமிழகத்தில் தற்போது 144 கோவில்களில் திருக்கோவில் அன்னதானத் திட்டம்செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் மேலும் 18 கோவில்களில்அன்னதானம் வழங்கப்படும். இதையும் சேர்த்து இனிமேல் 162 கோவில்களில் அன்னதானம்வழங்கப்படவுள்ளது.
அன்னதானம் வழங்கும் கோவில்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறுவர்களுக்கு ஆன்மீகவகுப்புகள், ஒழுக்க நெறிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன.
புதிதாக அன்னதானம் வழங்கப்படவுள்ள கோவில்களிலும் இந்நடைறை பின்பற்றப்படும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications