பொடா: கருணாநிதிக்கு அத்வானி கடிதம்
சென்னை:
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைமத்திய அரசு எடுக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு துணைப் பிரதமர் அத்வானி உறுதிஅளித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதிக்கு அத்வானி ஒரு கடிதம் எழுதியுள்ளதாக மதிமுக அவைத் தலைவரானஎல். கணேசன் தெரிவித்தார்.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்று அந்தக் கடிதத்தில் அத்வானி கூறியுள்ளதாக கணேசன் இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோருடன் கணேசன் இன்று பகல் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப்பேசினர். பின்னர் நிருபர்களிடம் கண்ணப்பன் பேசுகையில்,
விடுதலைப்புலிகளை நான் ஆதரித்துப் பேசியதாகவும், அதனால் என்னை அமைச்சர் பதவியில்இருந்து நீக்குமாறும் மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் கடிதம்எழுதினார்.
ஆனால் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இந்தப் புகார்களை மறுத்து என் மீது நடவடிக்கைஎடுக்கத் தேவையில்லை என்று கூறி விட்டார்.
வைகோ கைதுக்குப் பிறகும் நாங்கள் மதிமுக கட்சியைத் தொடர்ந்து நடத்தி வருவதைக் கண்டுஎரிச்சலடைந்துள்ள ஜெயலலிதா, எங்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுகிறார். ஆனால்இதற்கெல்லாம் நாங்கள் பயந்துவிட மாட்டோம் என்றார் கண்ணப்பன்.
-->












Click it and Unblock the Notifications