மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை இடிக்கத் தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறு உத்தரவு வரும் வரை ராணி மேரி கல்லூரிளை இடிக்கத் தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு தேதிகுறிப்பிடாமலும் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பல்வேறுகட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்று சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்விவரம்:

  • ராணி மேரி கல்லூரியை இடிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது.
  • கல்லூரி திறக்கப்பட்டு மாணவிகளுக்கு பாடங்களை மீண்டும் தொடங்க வேண்டும். உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மாணவிகள் விடுதியும் திறக்கப்பட வேண்டும்.
  • எந்தவிதமான தடங்கலும் இன்றி வகுப்புகள் நடக்க வேண்டும்.
  • கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் ஆசிரியை அல்லாத ஊழியர்கள் ஒழுங்காகப் பணிக்கு வர வேண்டும்.
  • மாணவிகள், ஆசிரியை மற்றும் ஆசிரியை அல்லாத ஊழியர்கள் தவிர வேறு எவரையும் கல்லூரி வளாகத்திற்குள்ளோ, விடுதிக்குள்ளோ அனுமதிக்கக் கூடாது.
  • கல்லூரிப் பதிவேட்டில் உள்ள மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு மட்டும் மாணவிகளைப் பார்க்க அனுமதி வழங்க வேண்டும்.
  • கல்லூரி மற்றும் விடுதிக்குக் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும்.
  • கல்லூரி வளாகத்திற்கு எஸ்.பி. அந்தஸ்துக்குக் குறையாத போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும் பாதுகாப்புப் பணிக்கு நியமித்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டும்.
  • ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனே அதை தமிழக டி.ஜி.பியின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவுகளை நேற்று பிறப்பித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக இன்றும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் வழக்கின்தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கல்லூரி திறப்பு- வகுப்புகள் தொடங்கின:

முன்னதாக உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு ராணி மேரி கல்லூரிதிறக்கப்பட்டது.

மாணவிகள் அனைவரும் உற்சாகமாக வகுப்பறைகளுக்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்துபாடங்களும் நடத்தப்பட்டன.

கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மாணவிகளும், ஆசிரியைகளும் மகிழ்ச்சிதெரிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+