ஜெயலலிதா அடியோடு நிதானம் இழந்து விட்டார்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலினைக் கைது செய்தது, சந்தனக் கடத்தல் வீரப்பன்விவகாரத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதியைத் தொடர்புபடுத்துவது ஆகிய செயல்களால்முதல்வர் ஜெயலலிதா அடியோடு தன் நிதானத்தை இழந்து விட்டார் என மதிமுக பொதுச்செயலாளரான வைகோ கூறியுள்ளார்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குமுறிக் கொண்டிருக்கும் இதயங்களோடு போரடிக் கொண்டிருக்கும் மாணவிகளைச் சந்தித்துஆறுதல் கூறுவதும், ஆதரவைத் தெரிவிப்பதும் காலங்காலமாக அரசியல் தலைவர்கள்மேற்கொள்ளும் நடவடிக்கை.

ஆனால் கொஞ்சம் கூட கற்பனையே செய்ய முடியாத கற்பனைப் பொய்ப் புகார்களை ஸ்டாலின் மீதுபோலீசார் கூறியுள்ளனர். அவரை நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக அரசின் உச்சகட்டஅக்கிரமச் செயலாகும்.

வீரப்பனிடமிருந்து கன்னட ராஜ்குமார் மீட்கப்பட்ட விவகாரத்தில் பணம் கைமாறியதாகவும், அதில்ஒரு பங்கு கருணாநிதிக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக கருணாநிதி மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றுகூறியிருப்பதன் மூலம் ஜெயலலிதா தன்னுடைய நிதானத்தை அடியோடு இழந்து விட்டார் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் வைகோ.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன்உள்ளிட்ட தலைவர்களும் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+