14ம் தேதி முதல் வேன் உரிமையாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
சென்னை:
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து வரும் 14ம்தேதி முதல் தமிழக வேன் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளஉள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வேன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கமலக் கண்ணன் இன்றுசென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த சில மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்துஉயர்ந்து கொண்டே வருகின்றன.
மேலும் வாகனங்களுக்கு சாலை வரி, 15 ஆண்டுகள் பழமையான வேன்களுக்குத் தடை ஆகியவைதொடர்பாக சமீபத்தைய தமிழக பட்ஜெட்டில் கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் கண்டித்து வரும் 14ம் தேதி முதல் வேன், மினி வேன் உரிமையாளர்களாகியநாங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழகத்தில் வேன், மினி வேன் போன்றவை ஓடாது.
ஆனாலும் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், பால், மருந்து ஆகியவற்றை விநியோகம்செய்யும் வேன்கள் தடையில்லாமல் ஓடும் என்றார் கமலக் கண்ணன்.
-->


Click it and Unblock the Notifications
