பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக எதிர் கட்சிகள் மீது ஜெ. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதிர்க் கட்சிகள் பொறுப்புகெட்ட தனத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியதைக் கண்டித்து தமிழக சட்டசபையில் இருந்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இன்றுவெளிநடப்பு செய்தனர்.

அரசு ஊழியர் பிரச்சனை மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் கைது விவகாரம் ஆகியவை குறித்துவிவாதிக்க வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க் கட்சிகள் இன்று கோரினர்.

ஆனால் சபாநாயகர் காளிமுத்து இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தார். இதைத்தொடர்ந்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தைப் புறக்கணித்து விட்டு அவையை விட்டுவெளியேறினர்.

பின்னர் கேள்வி நேரம் முடிந்த பின்னர் மீண்டும் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் அவைக்குள் வந்தனர்.அரசு ஊழியர் பிரச்சனை, திமுக எம்.எல்.ஏக்கள் கைது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்என்று மீண்டும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தினர்.

இதுபோன்ற பிரச்சனைகளால் தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,எனவே உடனடியாக இவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் (எஸ்.ஆர்.பி.) குற்றம் சாட்டினார்.

அப்போது வெடுக்கென்று எழுந்து பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலைஎதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. எதிர்க் கட்சியினர் அராஜகத்துடனும் பொறுப்புகெட்ட தனத்துடனும்நடந்து கொள்கிறார்கள். இது போன்று பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவின் இந்தப் பேச்சை காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையாகக் கண்டித்தனர். இந்தப் பேச்சைத்திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால்அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.

பின்னர் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவையிலிருந்து வெளிநடப்புசெய்தனர்.

எஸ்.ஆர்.பி.:

அவைக்கு வெளியே வந்த பின்னர் நிருபர்களிடம் எஸ்.ஆர்.பி. கூறுகையில்,

முன்பு ஒருமுறை நான் "பொறுப்பில்லாமல்" என்ற வார்த்தையைப் பிரயோகித்தபோது அதைநாடாளுமன்ற நடைமுறையில் இல்லாத வார்த்தை என்று கூறி சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்துஅதை நீக்கினார்.

ஆனால் பொறுப்புகெட்ட தனத்துடன் எதிர்க் கட்சிகள் நடந்து கொள்வதாக ஜெயலலிதாபேசியுள்ளார். இந்த வார்த்தை நல்ல வார்த்தையா?

ராணி மேரி கல்லூரி மாணவிகளைச் சந்தித்து, ஆதரவு தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது?இதைக் கேட்டால் எங்களைப் பேசவே விடமாட்டேன் என்கிறார்கள். இது தொடர்பாக கூடிப் பேசிஅடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார் எஸ்.ஆர்.பி.

ஜி.கே. மணி:

இதேபோல் பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், பொறுப்பு கெட்ட தனம் என்ற வார்த்தையைமுதல்வர் பிரயோகிப்பது எங்களை அவமானப்படுத்துவதுபோல், கேவலப்படுத்துவது போல்உள்ளது.

நாங்கள் எல்லாம் யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்? மக்கள் எங்களை ஓட்டுப் போட்டுதேர்ந்தெடுத்துள்ளனர். அந்த மக்களின் உரிமைகள், பிரச்சனைகள் குறித்து நாங்கள் பேசக் கூடாதா?

அவ்வாறு பேசத்தான் சட்டசபைக்கே போகிறோம். ஆனால் பேசவே கூடாது என்றுபேச்சுரிமையையே பறித்துக் கொண்டு விடுகிறார்கள் என்றார் மணி.

கம்யூனிஸ்ட்டுகள்...

இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான பழனிச்சாமி கூறுகையில், இலவச மின்சாரம் ரத்து, அரசுஊழியர் ஸ்டிரைக், ராணி மேரி கல்லூரி விவகாரம் ஆகியவை தொடர்பாக நாங்கள் பேச முயலும்போதெல்லாம் எங்களைத் தடுத்து விடுகிறார்கள்.

அவற்றைப் பற்றி பேசவே வேண்டாம் என்கிறார்கள். ஒரு இடத்தில் பிரச்சனை என்றால் அங்குசென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விசாரித்தால், தார்மீக ஆதரவு கொடுத்தால்அதைச் சட்ட விரோதம் என்கிறார்கள்.

இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகளின் குரல் வளை நெரிக்கப்படுகிறது என்றார் பழனிச்சாமி.

""ஆளுங்கட்சியினர் கூறுவதற்கெல்லாம் "ஆமாம் சாமி" போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இதற்காகவே மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பியுள்ளார்கள்?"" என்றார்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான ஹேமச்சந்திரன்.

நிருபர்களுக்குத் தடை:

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சட்டசபைவளாகத்தில் நின்று அதிமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அவர்களை அப்புறப்படுத்துமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்ட காளிமுத்து,சட்டசபை வளாகத்தில் பேட்டி எடுக்கும் நிருபர்களை இனிமேல் சட்டசபைக்குள் நுழையஅனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து இன்று முழுவதும் சட்டசபையைப் புறக்கணிக்கப் போவதாகஎதிர்க் கட்சி உறுப்பினர்கள் அறிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+