ரஜினி மனைவியின் பள்ளியில் பா.ஜ.க. அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Joshi gives away diploma to rajinikanths daughterசென்னையில் ரஜினியின் மனைவி லதா நடித்தி வரும் ஆஸ்ரம் கல்வி மையத்தின் பட்டமளிப்பு விழா இன்றுநடந்தது. இதில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் முரளிமனேகர் ஜோஷி கலந்து கொண்டார். ரஜினியின் மகள்உள்பட 19 பேருக்கு அவர் பட்டங்கள் வழங்கினார்.

இந்தக் கல்வி மையத்தில் பிசினஸ் ஸ்டடீஸ், க்ரியேட்டிவ் ஸ்டடீஸ் மற்றும் சட்டப் பிரிவில் டிப்ளமோ பட்டம்பெற்ற 19 பேருக்கு ஜோஷி சான்றிதழ்களை வழங்கினார். வேளச்சேரியில் சிறிய பள்ளியாகத் துவக்கப்பட்டஆஸ்ரம் இன்று பட்டயப் படிப்புகள் வழங்கும் கல்லூரியாக வளர்ந்துள்ளது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இங்கு சட்டக் கல்வியில் டிப்ளமோ முடித்து இன்று பட்டம் பெற்றார்.

சென்னை மியூசிக் அகாடெமியில் இந்த பட்டமளிப்பு விழா நடந்தது. பா.ஜ.கவின் முக்கியத் தலைவரான ஜோஷி,ரஜினியின் இந்தப் பள்ளி விழாவில் பங்கேற்றது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினியின் ஆன்மிகத்தால்ஏற்கனவே பா.ஜ.க. கவரப்பட்டுள்ளது. இது தவிர மராட்டியர் என்பதால் சிவசேனையும் ரஜினி மீது ஒரு கண்வைத்துள்ளது.

சிவசேனைக்கு மிக நெருக்கமான பா.ஜ.க. தலைவர் முரளிமனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல பா.ஜ.கவுக்கு மிகப் பிடித்தமான மஞ்சள் நிற பட்டுச் சேலையில் மேடையில் வலம் வந்தார் லதாரஜினிகாந்த். ரஜினியின் இளைய மகன் செளந்தர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+