உத்தரப் பிரதேசத்திலிருந்து 26 தமிழக கொத்தடிமைகள் மீட்பு
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த 26 கொத்தடிமைகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில்உள்ள 2 ஸ்நாக் கம்பெனிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த சிறுமணி என்பவர் தன்னுடைய மகன் உத்தரப் பிரதேசத்தில்கொத்தடிமையாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்சில நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழகத்தின் கொத்தடிமைகள் மீட்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்உத்தரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றனர். அங்குள்ள ஒரு இனிப்புகள் தயாரிக்கும் கம்பெனியில்வேலைபார்த்துக் கொண்டிருந்த சிறுமணியின் மகனை அவர்கள் மீட்டனர்.
அப்போதுதான் அந்தக் கம்பெனியிலும் வேறொரு கம்பெனியிலும் தமிழகத்தைச் சேர்ந்தசிறுவர்களும், இளைஞர்களும் கொத்தடிமைகளாக வேலைபார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது. அந்த 2 கம்பெனிகளிலும் கொத்தடிமைகளாக வேலை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்கள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைவருக்கும் 11 முதல் 19 வயதுக்குள்தான் இருக்கும். இனிப்புகள் தயாரிக்கும்அந்தக் கம்பெனிகளின் சமையலறையை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத அளவுக்கு அவர்கள்கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர்.
மீட்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ.1,000 நிவாரண உதவியை உடனடியாக வழங்க மதுரைமாவட்ட கலெக்டர் சந்திரமோகன் உத்தரவிட்டார்.
மீட்கப்பட்டவர்களில் சிலர் படிக்க விரும்புவதாகவும், சிலர் பெட்டிக் கடை வைக்கஆசைப்படுவதாகவும் கூறிய கலெக்டர், அவர்களுடைய ஆசைகளை விரைவில் நிறைவேற்றப்போவதாகவும் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications