தீவனம் இல்லாமல் 2 லட்சம் கோழிகள் சாவு
பொள்ளாச்சி:
லாரி ஸ்டிரைக்கால் உரிய தீவனம் கிடைக்காமல் பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் பகுதிகளில்சுமார் 2 லட்சம் கறிக் கோழிகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.
தமிழகத்தில் சுமார் 10,000 கறிக் கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம்கறிக் கோழிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. லாரிகள் மூலம்தான் இவை கேரளாஉள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் லாரி ஸ்டிரைக் காரணமாக கடந்த 3 நாட்களாக கறிக் கோழிகளை விற்பனைக்குஅனுப்ப முடியவில்லை.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 11.4 லட்சம் கறிக் கோழிகள் விற்பனைஆகாமல் தேங்கி உள்ளன.
இதையடுத்து பிராய்லர் கறிக் கோழி விற்பனை செய்யும் கடைகளில் கோழிகள் வரத்து இல்லாதகாரணத்தால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.60ஆக விற்கப்பட்டு வந்த கறிக்கோழியின் விலை ரூ.100ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் உள்ள கறிக் கோழிப்பண்ணைகளுக்கு லாரிகள் மூலம் வர வேண்டிய தீவனம் வந்து சேராத காரணத்தால், தீவனம் இன்றிசுமார் 2 லட்சம் கறிக் கோழிகள் பலியாகியுள்ளன.
லாரிகள் ஸ்டிரைக் நீடித்தால் இந்த எண்ணிக்கையும் மளமளவென அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications