யார் கலைக்க சொன்னது?: பாஜகவுக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"நக்கீரன்" ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியிடம்லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஏராளமான பணம்கைமாறியுள்ளதாகவும் இது தொடர்பாக கருணாநிதியிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும்என்றும் சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில் கருணாநிதியிடம் விசாரணை நடந்து முடிந்து விட்டதாக இன்று காலையிலிருந்தேசென்னை முழுவதும் செய்திகள் பரவின. இது தொடர்பாக இன்று பகல் நிருபர்களிடம் கருணாநிதிகூறுகையில்,

இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் யாரும் என்னிடம் விசாரணை நடத்தவில்லை. அவர்கள்அவ்வாறு விசாரணை நடத்த வந்தால் முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த கடத்தல்கள்குறித்துத் தெரிவிப்பேன்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலைப் போலவே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சில அரசுஅதிகாரிகள், ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் போலீசாரிடம் தெரிவிப்பேன். அப்போதுமுந்தைய ஜெயலலிதா அரசு எவ்வாறு நடந்து கொண்டது என்பதைப் பற்றியும் கூறுவேன்.

பழிவாங்கும் நடவடிக்கையாகவே கோபாலைத் தற்போது கைது செய்துள்ளனர் என்றார் கருணாநிதி.

"ஆதங்கத்தில் பேசினார் ராமதாஸ்":

இந்நிலையில் 356வது அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைப்பது குறித்துநிருபர்களிடம் கருணாநிதி மேலும் கூறுகையில்,

இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும் திமுகவோ பாமகவோ மத்திய அரசைவலியுறுத்தவில்லை. இனியும் வலியுறுத்த மாட்டோம்.

அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று ஏதோஒரு ஆதங்கத்தில், ஆவேசத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார், அவ்வளவுதான்.

பத்திரிக்கை நிருபர்களும், மத்திய அரசும், மக்களும் தான் பேசுவதன் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று ராமதாஸ் நினைத்திருக்கக் கூடும்.

மற்றபடி இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்பது பாமகவின் கொள்கையோ,உறுதியோ கிடையாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இதுபோன்ற எந்தக் கொள்கையையும்கொண்டிருக்கவில்லை.

ஆனாலும் தமிழக பா.ஜ.க. குறித்து நான் எந்தவிதமான கருத்தும் கூற விரும்பவில்லை. அவர்கள்அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன்என்றார் கருணாநிதி.

"தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சம்பவங்கள் குறித்து வரும் மே 5ம் தேதி சென்னை வரும்பிரதமர் வாஜ்பாயிடம் பேசுவீர்களா?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு "அவர் வருகிறார் என்பதேநீங்கள் கூறிதான் எனக்குத் தெரிகிறது" என்று பதிலளித்தார்.

""அன்றாடம் பொய்"":

இதற்கிடையே, இப்போதெல்லாம் தமிழக அரசின் அதிகாரிகளும் கூட தினமும் பொய் பேசஆரம்பித்து விட்டனர் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறிநுழைந்ததாகக் கடந்த வாரம் திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

உண்மையில் ஸ்டாலின் அந்தக் கல்லூரிக்குள் கடந்த 8ம் தேதி காலையில் சென்றார். அன்று பிற்பகல்1.30 மணிக்கு தங்களிடம் புகார் கூறப்பட்டதாகப் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் 1.45 மணிக்கு வழக்கும் பதிவு செய்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் பார்த்தால் அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகவே எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்படவில்லையே, ஏன்?

சுமார் 26 மணி நேரம் கழித்து மறுநாள்தான் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பின்னர்அன்று நள்ளிரவிலேயே ஸ்டாலினை அதிரடியாகவும் கைது செய்துள்ளனர். இவை எல்லாமேஅனைவரையும் குழப்பும் விதமாகத்தான் உள்ளது.

மேலும் ராணி மேரி கல்லூரி மாணவிகள் மீதும் ஆசிரியைகள் மீதும் கூட திருட்டு வழக்குகளைப்போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த அராஜக ஆட்சியில் அன்றாடம் பொய், ஆள் ஆளுக்குப் பொய் சொல்வது வழக்கமாகப் போய்விட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+