இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் குறைகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதிக கடன் வாங்கும் தேசம் என்ற நிலையில் இருந்து குறைந்த அளவு கடன் வாங்கும் தேசம் என்ற நிலைக்குஇந்தியா வந்துள்ளது.

ஐ.நா. சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூகக் கமிஷன் ஆய்வு இதனைத்தெரிவிக்கிறது.

1991ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 35 சதவீத அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருந்தது.இப்போது இது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2003ம் ஆண்டு மார்ச் அளவுப்படி இந்தியாவுக்கு 102.3 பில்லியன்டாலர் வெளிநாட்டுக் கடன் உள்ளது.

உலக அளவில் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும் இந்தியாவில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் 4 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு வந்தது.இது 2001ம் ஆண்டை விட 2.4 சதவீதம் அதிகமாகும்.

இந்தியா மேற்கொண்டு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிதாக அமைக்கப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்புவசதிகள் ஆகியவை தான் இந்த புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. அதே போல இந்தியாவின் அன்னிய செலாவணிகையிறுப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு 54.1 பில்லியனாக இருந்து இந்தியாவின் அன்னிய செலாவணி கையிறுப்பு இப்போது 74.7பில்லியனாக அதிகரித்துள்ளது. பொருள்களை இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு ஓராண்டுக்குத் தேவைப்படும்அன்னிய செலாவணியைவிட கையிறுப்பு மிக அதிகமாகவே உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சாப்ட்வேர் மிக முக்கிய இடம் வகிக்கிறது.

இவ்வாறு ஐ.நா. கமிஷனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை:

இதற்கிடையே இந்தியாவில் சட்ட விரோதமாக அன்னியர்கள் குடியேறுவதைத் தடுக்க நாடு முழுவதும்அனைவருக்கும் அடையாள அட்டைகள் தரப்பட உள்ளதாக திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த்கூறியுள்ளார்.

முதல் கட்டமாக தமிழகம் உள்பட 13 எல்லைப்புற மாநிலங்களில் இத் திட்டம் அமலாக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+