பொடா சட்டத்தை உடனே வாபஸ் பெற வாஜ்பாய்க்கு கருணாநிதி அவசர கடிதம்
சென்னை:
பொடா சட்டம் தொடர்ந்து துஷ்பிரயோகமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் அதைத்திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
"நக்கீரன்" கோபால் மீதான வழக்குகள் பொடா சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்துபொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.அதில்,
பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பொடாசட்டத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறது.
பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல்பாடுகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டி,எல்லைகளை எல்லாம் மீறிப் போய்விட்ட நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையாளரே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதம்ஏந்திய தீவிரவாதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாக அர்த்தப்படுத்தி "நக்கீரன்" கோபால்கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 42 பேர் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர்அரசியல் பிரமுகர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை போன்ற காரணங்களுக்காக பொடா ஏவப்படுகிறது. அதுஇப்போது பத்திரிக்கையாளர்களையும் அச்சுறத்தத் தொடங்கியுள்ளது.
இதனால் பொடா தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஜனநாயகம் எங்கே என்று தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
எனவே பொடா சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியேஇல்லை. இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனஅந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications