நாளை காஷ்மீர் செல்கிறார் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
பிரதமர் வாஜ்பாய் 2 நாள் பயணமாக நாளை காஷ்மீருக்குச் செல்லும் நிலையில் கார்கில் பகுதியில்பாகிஸ்தான் படையினர் கடும் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, புதிய ரயில் பாதை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டபல நிகழ்ச்சிகளில் வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
மேலும் காஷ்மீரில் நடக்கும் ஒரு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர் பேசவுள்ளார்.காஷ்மீரில் ஒரு பிரதமர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுதான்முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 17 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீரில் நடந்த ஒரு பிரம்மாண்டமான பேரணியில் கலந்து கொண்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இன்னும் தன் பிடிவாதப் போக்கைக் கைவிடவில்லை. எல்லைப்பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்னும் ஊடுருவிக்கொண்டுதான் உள்ளனர்.
ஆனாலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாத வரைஅந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதை வாஜ்பாய் மீண்டும்மீண்டும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நாளை காஷ்மீர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் காஷ்மீரில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் வாஜ்பாய் முதல் முறையாகஅங்கு செல்கிறார்.
காஷ்மீரில் முழு அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பிரதமரின்காஷ்மீர் பயணம் அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாயின் காஷ்மீர் பயணத்தை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த மாதம்தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட 24 ஹிந்துக்களின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில்உள்ளனர். "எங்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவர் வருகையைப் பற்றி எங்களுக்குஅக்கறை இல்லை" என்று குமுறலுடன் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே வாஜ்பாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹூரியத் மாநாட்டுக்கட்சியினர் காஷ்மீரில் இரண்டு நாள் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வாஜ்பாய் நாளை காஷ்மீர் வரும் நிலையில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படையினர் கடுமையானஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் அங்குள்ள ஒரு நீர்மின் உற்பத்தி நிலையம் கடுமையாகச்சேதமடைந்து விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications