பெரம்பலூர் அருகே பஸ்-வேன் மோதல்: புதுமண தம்பதி உள்பட 11 பேர் பலி
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பஸ்சும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் புதுமணத்தம்பதி, 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து விழுப்புரம் நோக்கி திருமண கோஷ்டியை ஏற்றிக் கொண்டு ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம்தான் திருமணம் செய்து கொண்ட வெங்கடேசன்-பத்மாஉள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த வேனில் இருந்தனர்.
பெரம்பலூரை அடுத்த சிறுகனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்த் திசையில்சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது இந்த வேன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இவ்விபத்தில் வேனில் பயணம் செய்தவெங்கடேசன்-பத்மா தம்பதி, 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 21 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 2 பெண்கள்உள்பட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இவர்களில் ஒருவர் பஸ்சில் வந்தவர். மற்ற 18பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications