அதிமுக ஆட்சியில் வீரப்பன் கடத்தவில்லையா?: கருணாநிதி
சென்னை:
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலும் சந்தன வீரப்பன் பலரையும் கடத்தியுள்ளான். ஆனால் திமுகஆட்சிக் காலத்தில் மட்டுமே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடந்தது போல் பிரம்மையைஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் ஏராளமான பணம் வீரப்பனுக்குக் கை மாறியதாககர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதைச் சமீபத்தில் சுட்டிக் காட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது தொடர்பாக முன்னாள்முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனசட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று கருணாநிதியிடம் விசாரணை நடத்தி விட்டதாகத்தகவல்கள் கிளம்பின. ஆனால் எந்தப் போலீசாரும் இதுவரை தன்னை வந்து விசாரிக்கவில்லைஎன்று கருணாநிதி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் ஆட்சிகள் மாறிக் கொண்டிருந்தாலும் வீரப்பன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்அவ்வப்போது ஆட்களையும் அதிகாரிகளையும் கடத்திக் கொண்டுதான் இருந்தான்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் கூடத்தான் அவன் சில அதிகாரிகளைக் கடத்தினான்.கடந்த 1994ம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிதம்பரநாதன் உள்பட 3 பேரை வீரப்பன் கடத்திச்சென்றான்.
அதற்கு முன் 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது வனத் துறை காவலர் சிதம்பரம்என்பரை வீரப்பன் கும்பல் கொன்றது. பின்னர் 1989ல் 3 பேரை வீரப்பன் கடத்திக் கொன்றான்.
இவை அனைத்தும் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் நடந்துள்ளன. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில்தான் வீரப்பன் அனைவரையும் கடத்தினான் என்பது போன்ற பிரம்மையை உருவாக்கஜெயலலிதா அரசு முனைந்து வருகிறது.
மேலும் முன்னாள் டி.ஜி.பியான தேவாரம் பதவியில் இருந்தபோதுதான் ராஜ்குமார் கடத்தப்பட்டார்என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக திமுக ஆட்சிக் காலத்தை விட தற்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில்அதிகமாகச் செலவழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அவனைப் பிடிக்கவில்லை என்று தன்அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
இதற்கிடையே வீரப்பனைப் பிடிக்க தீவிர முயற்சி நடந்து வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் நிருபர்களிடம் கூறினார். வீரப்பன் விரைவில் உயிருடனோ,பிணமாகவோ பிடிபடுவான் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications