விஷம் குடித்த பின் காப்பாற்றுமாறு கதறிய அதிமுக தொண்டர் பரிதாப சாவு
சென்னை:
விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் தன்னைக் காப்பாற்றுமாறு அலறிக்கதறிய அதிமுக தொண்டர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அருகே பம்மல் புறநகர் பகுதியில் உள்ள அண்ணா நகரில் டெலிபோன் பூத்தை நோக்கிஒரு வாலிபர் தள்ளாடியவாறு வந்தார்.
பின்னர் கஷ்டப்பட்டு டெலிபோன் ரிசீவரை எடுத்து டயல் செய்து கொண்டிருந்தபோது அவர்திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் பதறிப் போய் விசாரித்த போதுதான் அவர் விஷம் குடித்திருப்பதுதெரிய வந்தது. "நான் விஷம் குடிச்சுட்டேன். என்னைக் காப்பத்துங்க.. என்னைக் காப்பாத்துங்க..."என்று கதறியுள்ளார் அந்த வாலிபர்.
பதறிப் போன அப்பகுதி மக்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசாரும்உடனடியாக விரைந்தனர் ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் பரிதாபமாகஉயிரிழந்தார்.
அவருடைய வலது கையில் இரட்டை இலை பச்சை குத்தப்பட்டிருந்ததால் அவர் அதிமுகதொண்டராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அவருடைய இடது கையில் ராமுஎன்றும் பெயர் எழுதப்பட்டிருந்தது.
அவர் யார், எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications