என் உயிருக்கு ஆபத்து: தொகாடியா சொல்கிறார்
ஆஜ்மீர்:
சிறையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாகூறியுள்ளார். இதையடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
பல்வேறு மதக் கலவரங்களுக்கு காரண கர்த்தாவாக இருந்தவர் தொகாடியா. இந்தக் கலவரங்களில் அப்பாவிஇந்துக்கள், முஸ்லீம்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ராஜஸ்தானில் திரிசூலங்களை வினியோகித்த இவர்மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயன்றார்.
இதையடுத்து அவரை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது செய்ய உத்தரவிட்டார். நாட்டைப்பிளவுபடுத்த முயன்ற தொகாடியா மீது தேச துரோக வழக்கை ராஜஸ்தான் அரசு பதிவு செய்துள்ளது.
சிறையைக் கண்டு அஞ்ச மாட்டேன் என வசனம் பேசிய தொகாடியா உடனே ஜாமீன் கேட்டு மனு போட்டார்.ஆனால், அந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து இனி நான் ஜாமீன் கேட்க மாட்டேன்என நேற்று மீண்டும் வீர வசனம் பேசினார்.
ஆனால், இன்று மீண்டும் ஜாமீன் கேட்டு இன்னொரு மனு தொகாடியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வேண்டும் என்று கோரியும் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார் தொகாடியா.
ஆஜ்மீர் முதன்மை மாஜிஸ்திரேட் இந்து பரீக்கிடம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், என்னைஎண்கெளண்டர் போட்டு கொல்லப் போவதாக மாநில டி.ஜி.பியே மிரட்டுகிறார். வீரமரணம் அடையத் தான் நான்ராஜஸ்தானுக்குள் நுழைந்ததாக அரசு வழக்கறிஞரே கூறுகிறார்.
என்னைச் சந்திக்க வந்த வி.எச்.பியின் சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கலை போலீசார் அனுமதிக்கவில்லை. சிறைவாசலிலேயே திருப்பி அனுப்பிவிட்டனர். எனது உறவினர்கள் கூட என்னை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட எனக்கு தினமும் மருத்துவரைக் கொண்டு பரிசோதனை நடத்த வேண்டும்.சிறையில் எனக்கு ஸ்லோ பாய்சன் விஷம் கூடத் தருவார்கள். இதனால், தினமும் ரத்தப் பரிசோதனையும்நடத்தப்பட வேண்டும்.
தடா கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அஜ்மீர் சிறையில் என்னையும் போட்டுள்ளார்கள். அந்தக் கைதிகளால் எனக்குஆபத்து ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மீண்டும் ஜாமீன் மனு:
இதற்கிடையே ஜாமீன் கோரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொகாடியா சார்பில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications