வைகோவை சந்திக்க கருணாநிதிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்க திமுகதலைவர் கருணாநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி வைகோ கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் சிறைக்குச் சென்ற கருணாநிதி, வைகோவை சந்தித்துப்பேசினார். அவர்கள் சந்திப்புக்குப் பின்னர் திமுகவும் மதிமுகவும் வேகமாக நெருங்கி வரஆரம்பித்தன.
இந்நிலையில் வைகோவை சந்திப்பதற்காக கருணாநிதி சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால் தற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
இது தொடர்பாக மதிமுக பொருளாளரும் மத்திய அமைச்சருமான கண்ணப்பன் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுடன் வேலூர் சிறைக்குச் சென்று வைகோவை சந்திக்கத்திட்டமிட்டிருந்தார் கருணாநிதி.
ஆனால் இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று மாலைதமிழக உள்துறை செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுமுறை நாட்களில் எல்லாம்சந்திப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதற்கு முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் வைகோவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்து.ஆனால் வைகோவை கருணாநிதி சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது அனுமதி அளிக்கமறுக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்கண்ணப்பன்.
முன்னதாக இது தொடர்பாக கருணாநிதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், விடுமுறையாகஇருந்தாலும் மத்திய அமைச்சர்கள் சிறையில் உள்ளவர்களைச் சந்திக்க விரும்பினால் சிறப்புஅனுமதி வழங்கப்படும்.
அப்படிப்பட்ட சிறப்பு அனுமதியை டில்லியில் இருந்து வாங்கி தமிழக அரசுக்கு அனுப்பி விட்டுகடந்த சனிக்கிழமை கடலூர் சிறைக்குச் சென்று திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலினைச்சந்திக்க முயன்றுள்ளார் பாலு. ஆனால் அவரை சிறைக்குள்ளேயே அனுமதிக்காமல் திருப்பிஅனுப்பினர்.
வரும் சனிக்கிழமை நான் வேலூர் சிறை சென்று வைகோவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன்.இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மத்திய அரசு கூறியும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.இதுதான் மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்கும் மதிப்பு என்றார் கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications