ஜாதிச் சண்டை, கூட்டணி குழப்பம்: இது தான் தமிழக பா.ஜ.க.
நாகர்கோவில்:
தமிழக பா.ஜ.கவில் கட்சியின் மாநிலத் தலைவர் கிருபாநிதிக்கும் தேசிய செயலாளர் இல.கணேசன் கோஷ்டிக்கும்இடையே சண்டை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதிமுக, திமுக விஷயத்தில் எந்த நிலை எடுப்பது என்றுகூடத் தெரியாமல் அக் கட்சி குழப்பத்தில் உள்ளது.
கிருபாநிதியை தலித் என்பதால் அக் கட்சியில் உள்ள முக்கிய ஜாதியினர் மட்டம் தட்டி வருகின்றனர். இதையடுத்துசமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்த கிருபாநிதி, தன்னை சாதிரீதியில் மாநில பா.ஜ.க. தலைவர்கள்கேவலப்படுத்தி வருவதாகச் சொல்லி கண் கலங்கியுள்ளார்.
திமுகவுடன் மோதல் போக்கு தேவையில்லை என்று கிருபாநிதி கருதுகிறார். கிருபாநிதியுடன் மோதி வரும்இல.கணேசனும் கூட இதே கருத்தையே கொண்டுள்ளார்.
ஆனால், எச்.ராஜா போன்றவர்கள் அதிமுகவுடன் கூட்டணிக்கு தீவிரமாக முயன்று வருகின்றனர். அவருக்குகட்சியின் முக்கிய ஜாதியைச் சேர்ந்த தலைவர்களும் துணைப் பிரதமர் அத்வானி கோஷ்டி தலைவர்களும் முழுஆதரவு தந்து வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று பா,ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் வேலாயுதம் (இவர் அதிமுக எதிர்ப்பு கோஷ்டி)நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினன். அவர் கூறுகையில், அதிமுகவுடன் எங்களுக்கு எந்தவிதமானஒட்டும் இல்லை. உறவும் இல்லை. அவர்களுடன் கூட்டணியும் இல்லை. அதிமுக அரசுக்கு ஆதரவாகவு நாங்கள்செயல்படவில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.திமுகவுடன் உரசல்கள் இருந்தாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற முறையில்அக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கிறது என்றார்.
அதே நேரத்தில் கட்சியின் இன்னொரு துணைத் தலைவரான வைத்தியலிங்கம் (இவர் அத்வானி ஆதரவு எச்.ராஜாகோஷ்டி) வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு சில தவறான நடவடிக்கைகளை எடுத்து வருவது உண்மைதான். அதற்காக ஒன்றுக்கும் உதவாத எதிர்க் கட்சிகள் (திமுக தலைமையிலான கட்சிகள்) வரிசையில் சேர பா.ஜ.க.விரும்பவில்லை.
நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கும் கட்சி என்று கருணாநிதி கூறியுள்ளார். அது தவறானது. சட்டசபையிலும்சட்டசபைக்கு வெளியிலும் ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்பதுதான்உண்மை. தமிழக அரசின் தவறான முடிவுகளைக் கண்டிக்கும் அதே நேரத்தில் சரியான நடவடிக்கைகளைபாராட்டாமல் இருந்ததில்லை.
ஆளுங்கட்சியை சும்மா எதிர்க்க வேண்டும் என்று மட்டும் நினைக்கும் கட்சிகளுடன் கூட்டு சேர பா.ஜ.கவுக்குவிருப்பமில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு ஏதும் இல்லை. இருந்தாலும் காங்கிரஸ்கட்சியையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு இந்தக் கட்சியில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தில் உள்ளது.
இதனால் திமுக, அதிமுக ஆகியவை தொடர்பாக கட்சி என்ன நிலை எடுத்துள்ளது என்பது புரியாமல் அக் கட்சியின்தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துபோய் உள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications