வீரப்பனுக்கு போன பணம்: ரஜினியையும் விசாரிக்க தமிழக போலீஸ் முடிவு
சென்னை:
கன்னட நடிகர ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்குப் பணம் கைமாறியதாகக் கூறப்படுவது குறித்து கருணாநிதி தவிரரஜினிகாந்திடமும் விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் விரைவில் ரஜினியிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுவிட்டார். திமுக தலைவர் கருணாநிதியிடமும் விசாரணைநடத்தப்படும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. வீரப்பனுக்கு கைமாறிய பணத்தில் ஒரு பகுதியை கருணாநிதியேவைத்துக் கொண்டதாக ஜெயலலிதா கூறுகிறார்.
இதனால் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரைக் கொண்டு கருணாநிதியை விசாரிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் கேட்ட பெரும் தொகையைத் திரட்டுவதில் முக்கிய உதவி புரிந்தவர் ரஜினிகாந்த்தான். அவரே ஒரு பெரும் தொகையை இதற்காகக் கொடுத்ததாகவும், தனக்கு நெருக்கமான கன்னட நடிகர்களிடம்இருந்து அவரே முன் நின்று பணம் திரட்டியதாகவும் கூறப்பட்டது.
இதனால் ரஜினியிடமும் விசாரணை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர் தவிர கன்னடநடிகர்களிடமும் விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும்தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications