ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது: சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்த மலை ரயில் இன்று காலை தடம்புரண்டது. இதனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் சுற்றுலாப் பயணிகள் கடும்அதிருப்தி அடைந்தனர்.
தினமும் காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் ஊட்டிக்குக் கிளம்பிச் செல்லும்.
ஆனால் ரயில் ஓடுவதற்குத் தேவையான நிலக்கரியை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்றுஇந்த ரயில் 8 மணிக்குத்தான் கிளம்பியது.
ஒரு மணி நேரம் தாமதமானாலும் கூட பரவாயில்லை என்று மலை ரயிலில் சென்ற பயணிகள்உற்சாகத்துடன் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே சென்றனர்.
இந்நிலையில் கல்லல் என்ற ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கும்போது மலைரயிலின் 2வது பெட்டி திடீரென்று தடம் புரண்டது. இதையடுத்து மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். ரயில்வேத் துறையின் கடும்அஜாக்கிரதை காரணமாகவே மலை ரயில் பாதையில் அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேஉள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினர்.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வேன் மற்றும் கார்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ரயில் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில்மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி மலைப் பாதையில் ரயில் தடம் புரண்டிருப்பது இதுதான் முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications