தயாளு அம்மாளுடன் சென்று வைகோவை சந்தித்தார் கருணாநிதி
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கருணாநிதிதனது மனைவி தயாளு அம்மாளுடன் இன்று மீண்டும் சந்தித்துப் பேசினார். ஆனால், அவர்களை தனியாகச்சந்திக்க விடாமல் சிறை அதிகாரிகள் சுற்றி நின்று கொண்டனர்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டவைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு கடந்த நவம்பர் 5ம் தேதி வைகோவைச்சந்தித்துப் பேசினார் கருணாநிதி.
இந்நிலையில் இன்று வேலூர் சிறையில் மீண்டும் வேலூர் சிறையில் வேகோவை கருணாநிதிசந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் அவரைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கருணாநிதிகூறுகையில்,
வைகோவை நான் தனியாகச் சந்தித்துப் பேச அனுமதி கேட்டேன். ஆனால் தனியாகச் சந்தித்துப் பேசமுடியாது என சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் அதிகாரிகள் சுற்றி நிற்க திறந்தமனதுடன் நாங்கள் இருவருமே பேசிக் கொள்ள முடியவில்லை.
மேலும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் பிச்சாண்டியை நான்சந்திக்கவும் சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
வைகோவும் நானும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சுற்றிலும் சில அதிகாரிகள் நாங்கள்என்ன பேசுகிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில்வெளியே வர விரும்பவில்லை என்று வைகோ என்னிடம் தெரிவித்தார்.
பொடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக வைகோஎன்னிடம் பேசினார். இவ்வழக்கின் முடிவை நாங்கள் விரைவில் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
தமிழக அரசின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக வரும்24ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் குறித்தும்வைகோவுடன் விவாதித்தேன் என்றார் கருணாநிதி.
கடந்த சனிக்கிழமை வைகோவைச் சந்திக்க கருணாநிதி அனுமதி கோரியிருந்தார். ஆனால்,அன்றைய தினம் அரசு விடுமுறை தினம் என்று கூறி அனுமதி தகர போலீசார் மறுத்துவிட்டனர்.
ஜாமீனில் வெளியே வந்துவிடுமாறு வைகோவிடம் தயாளு அம்மையாரும், கருணாநிதியும்யோசனை கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அதை வைகோ ஏற்க மறுத்துவிட்டதாகக்கூறப்படுகிறது. தயாளு அம்மாளுடன் வைகோவின் மனைவி அவ்வப்போது ஆலோசனை நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.
"பொடா போராட்டம்":
முன்னதாக, பொடா சட்டத்திற்கு எதிராக மிகத் தீவிரமான போராட்டத்தை மேற்கொள்ள திமுகதயாராகி வருகிறது என்று கருணாநிதி கூறினார்.
வேலூரில் தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டபின்னர் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். இதையோசனையாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். உத்தரவாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவேஅதுகுறித்து நான் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை வாஜ்பாய் இப்படிக்கூறியிருந்தால் சிந்திக்க வேண்டியதுதான்.
பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அந்த சட்டத்திற்குஎதிராக திமுக தீவிரமான போராட்டத்தை நடத்த தயாராகி வருகிறது. முடிந்தால் சென்னையில் வரும்24ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கூட இது குறித்து விவாதிக்கப்படும்.
"நக்கீரன்" கோபாலுக்கு ஆதரவாக போராட பத்திக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்தப்போராட்டத்திற்கு எனது ஆதரவும், திமுகவின் ஆதரவும் எப்போதும் உண்டு.
என்னை தமிழ் இலக்கிய வியாபாரி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆமாம், நான்வியாபாரிதான். என்னிடம் சரக்கு உள்ளது, விற்கிறேன். தவறில்லையே என்றார் கருணாநிதி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications