ஜாதி வெறியை தூண்டும் டாக்டர்கள்: ராமதாஸ், கிருஷ்ணசாமி மீது ஜெ. கடும் தாக்கு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமியும் தமிழகத்தில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதி திராவிடர் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து சட்டசபையில் இன்று விவாதம் நடந்தது. அதில்பார்வர்ட் பிளாக் கட்சியின் உறுப்பினரான சந்தானம் பேசுகையில், மக்களிடையே கல்வியைப் பரப்பினால் ஜாதிவெறி ஒழிந்துவிடும். இதனால் மக்களிடையே கல்வியைப் பரப்ப அரசு முயல வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, கல்வி கற்றுவிட்டால் மட்டும் ஜாதி வெறி அடங்கிவிடாது. இதற்கு உதாரணம்ராமதாசும் கிருஷ்ணசாமியும். இருவரும் எம்.பி.பி.எஸ். அளவுக்குப் படித்த டாக்டர்கள் தான், ஆனாலும் அவர்கள்தான் தமிழகத்தில் ஜாதி வெறியைப் பரப்பி வருகின்றனர் என்றார்.
உடனே எழுந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாசுக்கு ஜாதி உணர்வு தான்உள்ளதே தவிர வெறி இல்லை என்றார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா இரண்டும் ஒன்று தான். இதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications