லாரி ஸ்டிரைக்: 3 முக்கிய கோரிக்கைகள் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

லாரி உரிமையாளர்கள் 10 கோரிக்கைகளில் 3 முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துவிட்டதால் அவர்களுடைய வேலைநிறுத்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் தெரிகிறது.

லாரிகள் ஸ்டிரைக் தொடர்பான விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. லாரிஉரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு மிகவும் அலட்சியத்துடன் கையாண்டுவருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் இவ்விஷயத்தில் மத்திய அரசு தன் நிலையில் உறுதியாக இருப்பதாக தரைவழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் கந்தூரி தெரிவித்தார்.

லாரி உரிமையாளர்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அவர் நிராகரித்துள்ளார். மற்ற 7கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. அவர் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

15 ஆண்டுகள் பழமையான லாரிகள் மீதான தடையை நீக்க வேண்டும், அதிக வாகன இன்சூரன்ஸ்தொகையை வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும், மதிப்புக் கூட்டு வரியிலிருந்துவிலக்கு அளிக்க வேண்டும், லாரிகளுக்கு தேசிய பெர்மிட் வழங்கும் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும், ஆர்.சி. புக் மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றை கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை விலக்கிக் கொள்ளுதல் என்ற பேச்சுக்கே இடம்இல்லை. அதேபோல் டீசலுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையையும் ஏற்க முடியாது.

மேலும் அதிக சுமைகளை ஏற்றத் தடை விதிப்பது மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.எனவே இந்தக் கோரிக்கையையும் ஏற்க முடியாது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கந்தூரி.

இந்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு நிராகரித்து விட்ட நிலையில் லாரி உரிமையாளர்கள்தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது.

மேலும் 2 மாநிலங்களில் ஸ்டிரைக் வாபஸ்:

இதற்கிடையே மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா மாநிலங்களிலும் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்பெறப்பட்டுள்ளன.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்துஅம்மாநிலத்தில் நேற்று முன்தினம் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மேற்குவங்காளம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களிலும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை வாபஸ்பெற்றுக் கொண்டனர்.

இருந்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்று 9வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.சுமார் 27 லட்சம் லாரிகள் ஓடாமல் நின்று போயுள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின்விலைகளும் அதிகரித்துள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களும் கடுமையாகப்பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து 9 நாட்களாக வேலை இல்லாத காரணத்தால் அவர்கள் பட்டினிகிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் தேதியிலிருந்து டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளதால் விரைவில்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் என்று தெரிகிறது.

குஜராத்தில் வன்முறை:

இதற்கிடையே குஜராத்தில் லாரி உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போதுவன்முறை வெடித்தது.

இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். கல்வீச்சுசம்பவங்களில் 12 பேர் காயமடைந்தனர்.

ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை:

இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத்தீர்த்து வைக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ரெடிமேட் ஆடை ஏற்றுமதி கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+