காய்கறி ஏற்றிச் சென்ற 3 லாரிகள் கவிழ்ப்பு: போராட்டக் காரர்கள் அட்டகாசம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சென்னைக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 3 லாரிகள்கவிழ்க்கப்பட்டன. இது தொடர்பாக லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள சிலரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 9வது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் காய்கறிஉள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பஸ்கள், டிராக்டர்கள் மூலமாகத்தான் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.மேலும் போலீஸ் காவலுடன் சில லாரிகள் காய்கறிகளைக் கொண்டு செல்கின்றன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து முருங்கைக்காய்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகளும், வாழைக்காயை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரியும் நேற்று இரவுசென்னைக்குப் புறப்பட்டன.
வழியில் பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலத்தில் லாரிகளை நிறுத்தி விட்டு 3 டிரைவர்களும்டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சில டிப்பர் லாரி உரிமையாளர்கள், டீ குடித்துக் கொண்டிருந்த லாரிடிரைவர்களுடன் தகராற்றில் ஈடுபட்டனர். லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி லோடு ஏற்றிச் செல்லலாம் என்று கூறித் தகராறுசெய்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர்களும் தங்கள்லாரிகளைக் கிளப்பிச் சென்றனர்.
அப்போது ஏற்கனவே தகராறு செய்தவர்கள் தங்கள் டிப்பர் லாரிகளைக் கொண்டு அந்த லாரிகள்மீது மோத முயற்சித்தனர். இதனால் முருங்கைக் காய் மற்றும் வாழைக்காய் ஏற்றி வந்த 3 லாரிகளும்நிலை தடுமாறிக் கவிழ்ந்தன.
இந்தச் சம்பவத்தில் சன்னாசி என்பவரும் ஜெகதீசன் என்ற லாரி கிளீனரும் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே லாரிகளை மோதிக் கவிழ்த்த டிப்பர் லாரிகளையும் அதில் வந்தவர்களையும்போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications